- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
உனக்கு மாத்திரையும் ஊசியும் மட்டும்..!!
உடலிற்கு உரிய மருந்து அல்ல..!!
தினமும் உடற்பயிற்சி செய்வதும்...!!
தித்திக்கும் நல் மருந்து..!!
தியானம் திகட்டாத சக்தி மருந்து..!!
சூரிய ஒளி சூப்பர் இலவச மருந்து..!!
விரதம் இருப்பதும்.!! எண்ணெய் குளியலும்..!!!
வளம் தரும் மருந்துகள் உடலுக்கு..!!
உடல் கழிவுகளின் நீக்கமே...!!
உடல் நோய்களுக்கு உன்னத தீர்வு..!!
சிரித்து மகிழ்வதும் , சிரிக்க வைப்பதும்..!!
சிறந்த உற்சாக நல் மருந்து..!!

பசித்த வயிற்றுக்கு பழங்கள்...!!!
பவித்திரமான மருந்து..!!!
ஆழ்ந்த தூக்கம்..!! நீண்ட ஆயுளுக்கும்..!!
ஆரோக்கியத்திற்கும்..!! புத்துயிர் மருந்து ..!!!
அருவிகளின் ஆசையாய் குளிப்பது ..!!!
ஆரோக்கியத்திற்கு அத்துணை நல் மருந்து..!!!
அன்புடன் வாழ்வதும், நட்புடன் வாழ்வதும்..!!!
அனைத்திற்கும் அருமருந்து...!!
உன் நேர்மறை எண்ணங்களே..!!
உன் வாழ்க்கைக்கு வளமான மருந்து...!!!
நல்லதே நடக்கும் என்பதில் ..!!
நம்பிக்கை வைப்பதும் நல் மருந்தே..!!!
மருந்து பொன்மொழிகள்:-
உயிர் வாழ உண்.!! உண்ண வாழாதே..!!
உணவே மருந்து..!!மருந்தே உணவு.. .!!
உடல் மொழி அறிந்து, உடல் நலம் பேணு..!!
கனிகள் உண்டு , பிணி இன்றி வாழ்..!!
பசிக்காக சாப்பிடு..!!ருசிக்காக சாப்பிடாதே..!!
நல்லதே நினை..!! நல்லதே நடக்கும்..!!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தடை பல தாண்டு.. தடுப்பது எதுவோ.. Obstacles can never stop you dear!
காணாமல் போகும் காலடித் தடங்கள்.. Foot prints that disappear in waves
என் கையில் மட்டும் அது கிடைச்சா.. The Magic Wand in my Hand!
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
திரும்ப வருமா?
ஆத்மாவின் அழுகை
தினம் தினம் பரபரப்புடன் சென்னை போலீசார்
டிசம்பர் 30ல் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி.. என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
{{comments.comment}}