- வ. துர்காதேவி
முதலாம்
சந்திப்பில்
நாம்
அறிமுகமானோமே
என்பதோடு
நின்றுவிடாமல்
அந்நிய மொழி
நாளில்
சந்தித்ததால்
யார் என்று
அறியாமல்
பேர் கூட
தெரியாமல்
“வாங்க, பழகலாம்”
என
நீண்டது
சில மணி நேரங்கள்
அன்று.

வரலாறு முக்கியம்
அமைச்சரே என்று
வரலாறு படைக்கும்
நோக்கில் இருந்த
அத்தனை முகங்களும்
மலர்ந்தன
இன்று
மீண்டும்
என்னை
பார்த்ததும்.
நானோ
பாராமுகமாக
என் வேலையை
செவ்வனே
செய்யத்
தொடங்கினேன்.
பத்து ஆண்கள்
பத்து பெண்கள்
என
குழுமியிருந்த போதும்
ஒரு புறம்
எந்த சலனமும் இல்லாமல்
“இது மௌனமான நேரம்”
என
மெதுவாக நகரத் தொடங்கிய
அதே நேரத்தில்
மற்றொருபுறம்
இசைக் கச்சேரியும்
அந்தாக்ஷரியும்
ஆரவாரமாய்
தொடங்கியது.
“பூஜைக்கேத்த பூவிது”
என்று
இசைஞானி
பூ தொடுக்க
“பூவ பூவ பூவ” என்று
பின்னாலேயே
அவர் மகனும்
வந்து சேர
“பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்”
என்று
தான் கண்ட அதிசயத்தை
ரகுமான் இசையமைக்க
“பூக்கள் பூக்கும் தருணம்” என்று
ஜி.வி. பிரகாஷ் இணைய
“மல்லிகை இல்லாமல்
பூக்களா?” என
“மல்லிகையே மல்லிகையே” என்று
தொடங்கிய
தேவாவை
தடுத்து
“பவளமல்லி தான்
இன்றைய யுகத்தின் வாசம்”
என்று
கச்சேரி
ஆர்ப்பாட்டமாக
சென்று கொண்டிருந்த நேரத்தில்—
நானே
“அண்ணா, சொல்லுங்கண்ணா”
என்று கேட்கும்
வயதில்
அமர்ந்திருந்த
ஒருவர்
மெல்ல
அழைத்தார்.
சங்கீத
ஸ்வரங்கள்
இது
ஏழே கணக்கா?
இன்னும் இருக்கா?
என்று
நேரத்தை கடத்த
மனதில்
அற்புதமாய்
ஓடிக்கொண்டிருந்த
அந்த கச்சேரியை
சட்டென
நிறுத்திவிட்டு
“என்ன?”
என்று கேட்டேன்
அதீத
அக்கறையுடன்.
“SIPCOT — குறிப்பு வரைக”
என்ற கேள்விக்கு
என்ன வரைய வேண்டும்
என்று கேட்டார்.
செல்வதெல்லாம்—
சோதனை மேல் சோதனை…
போதுமடா சாமி!
(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}