- வே. தங்கப்பிரியா
ஒரு பெண் என்பவள் தன் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வருபவள். அதில் நானும் ஒரு பெண். இது என் கதை.. உங்களிடம் பகிர விரும்புகிறேன் ஒரு அன்புத் தோழியாக.
என் பெயர் பிரியா. சிறுவயதில் என் தாயை இழந்து விட்டேன். தகப்பனாரின் வளர்ப்பில் மிகவும் சிரமப்பட்டு தான் வாழ்ந்து வந்தேன். பிறகு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அனைவரும் குழந்தை இல்லையா என்று கேட்டு துன்பப்படுத்தினார்கள்.
ஒருவருடம் கழித்து குழந்தை உண்டானது. 5 மாதத்தில் டெங்கு காய்ச்சல் வந்ததால் அந்த குழந்தையை இழந்துவிட்டேன். மறுபடியும் ஒரு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது.. இதைத் தொடர்ந்து அடுத்து ஒரு பெண் குழந்தை என இப்போது இரு குழந்தைகள் உள்ளன.
நான் குழந்தைக்காக மருத்துவமனையில் பட்ட சிரமங்கள் அதிகம் என்பதால் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து வந்துவிட்டேன். அப்புறமும் என் உடல் பிரச்சனையை என்னால் சரி செய்ய முடியவில்லை. எனக்கு உதிரப்போக்கு அதிகமாக இருந்தது. எனது வயிற்றில் நீர் கட்டி இருக்கு என்று மருத்துவர்கள் கூறினார்கள். எனக்கு சிறு குழந்தைகள் என்பதால் அதை அறுவை சிகிச்சை செய்யாமல் மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம் என்று கூறினார்கள். நானும் மாத்திரை போட்டு அதை குணப்படுத்தினேன்.

ஆனால் அந்த மாத்திரையின் விளைவாக எனது கர்ப்பப்பையில் சதை வளர்ந்து மற்றும் பித்தப்பையில் கற்கள் வந்துவிட்டது. அந்த சதையை உடனடியாக நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இல்லையென்றால் அந்த சதை கேன்சராக மாறிவிடும் என்று கூறினார்கள். ஒரு மாதம் மாத்திரையில் அந்த சதை குறைகிறதா பார்ப்போம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் மறுபடியும் அதிக உதிரப்போக்கு எனக்கு ஏற்பட்டது. மருத்துவமனை சென்றபோது எனது கர்ப்பப்பையில் வளர்ந்த சதை பித்தப்பையிலும் வளர்ந்து விட்டது என்று கூறினார்கள். இதனால் உடனடியாக கர்ப்பப்பையும் பித்தப்பையையும் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். நான் வேறு வழி இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டேன்.
இப்போது நான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது. அதிக பளு தூக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிய போது, இதுதான் பெண்ணின் வாழ்க்கையா? என்று தோன்றியது. ஆனால் எவ்வளவுதான் உடல் அளவில் சிரமப்பட்டாலும் என்னால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற பெண்களுக்கு வரக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன். தற்போது சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்கு நீர்க்கட்டி (PCOS/PCOD) பிரச்சினைகள் வருவதைப் பார்க்கிறோம்.
நீர்க்கட்டி பாதிப்பு கண்டறியப்பட்டால், ஆரம்பத்திலேயே சித்தா, ஹோமியோபதி போன்ற இயற்கை மருத்துவ முறைகளை நாடுவது நல்ல பலனைத் தரும் என்பது எனது அனுபவப்பூர்வமான கருத்து. தீவிரமான அறுவை சிகிச்சைகளோ அல்லது நீண்ட கால மருந்து உட்கொள்ளலோ சில நேரங்களில் கருப்பையில் சதை வளர்ச்சி போன்ற மற்ற உபாதைகளுக்கு வழிவகுக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
எனவே, நம் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளின் மூலம் இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய முயற்சிப்பது சிறந்தது என்று நான் நம்புகிறேன்.
எனது அனுபவத்தை வைத்து இதை எழுதியுள்ளேன்.. தோழியரே.. உங்களது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.
(வே. தங்கப்பிரியா, விருதுநகர் மாவட்டம் கல்லூரணியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
இவ்வளவு தான் உலகம்…!
மௌனத்தின் அந்தாக்ஷரி
காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6
கல்லூரி!
அவளின் மறுபக்கம்!
{{comments.comment}}