சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ மற்றும் துரை வைகோ சந்தித்தனர்.
கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்று கிழமை வீடு திரும்பினார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சென்று வைகோ மற்றும் துரை வைகோ நலம் விசாரித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டார். கவின் கொலை வழக்கில் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 2026ல் கூட்டணி அரசு அமையாது. 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.

பெரியார் மற்றும் அண்ணாவின் மண்ணில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக போன்ற ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இடமில்லை. அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். முதல்வரின் சுற்றுப்பயணத்தில் மக்கள் திரளானோர் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். திமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் மதிமுக வெளியேறும் என அப்பட்டமாக செய்தி பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Navartri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
நட்பூ
{{comments.comment}}