Vasantha Panchami 2025.. வசந்த பஞ்சமி.. வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் திருவிழா!

Feb 01, 2025,03:54 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 2ம் தேதியன்று வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இதனை பசந்த பஞ்சமி என்றும் அழைப்பர். இந்தியா முழுவதும் வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு முக்கிய பண்டிகையாகும் இந்த வசந்த பஞ்சமி.


இது ஹோலிகா என்றும் அழைக்கப்படும். ஹோலிக்கான அனைத்து தயாரிப்புகளின் தொடக்கத்தை இது குறிக்கிறது. வசந்த பஞ்சமி வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் வளர்பிறை ஐந்தாம் நாள் தேய்பிறை ஐந்தாம் நாள் வரும் திதி பஞ்சமி திதி ஆகும்.


ஞானத்தின் வடிவான சரஸ்வதி தேவி தோன்றிய தினமே வசந்த பஞ்சமி ஆகும். மேற்கு வங்காளத்தில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து குழந்தைகளுக்கு கல்வியை துவங்குவர். அந்த தினத்தன்று குழந்தைகளின் முன்பாக பென்சில் ,பேனா ,சிறிய தொழில்நுட்பக் கருவிகள் என பல விதமான பொருட்களை வைப்பர். அதிலிருந்து அக்குழந்தை எப்பொருளை எடுக்கிறதோ அக்குழந்தைக்கு அதில் ஆர்வமும் எதிர்காலமும் அமையும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை.




பஞ்சாப் ,அரியானா ,ஜம்மு காஷ்மீர் ,அசாம் ,திரிபுரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் வசந்த பஞ்சமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்று அனைவரும் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற பூக்கள் வைத்து அலங்கரிப்பர் அவர்களும் மஞ்சள் நிற ஆடை அணிந்து பூஜை செய்வர் பூஜையில்  மஞ்சள் பிள்ளையார் லட்டு வைத்து வணங்குவர்.


வசந்த பஞ்சமி நேரம்


பஞ்சாப் மாநிலத்தில் இந்த காலத்தில் கடுகு செடிகளில் மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும். இதன் அடிப்படையில் மஞ்சள் வண்ணம் முக்கிய பங்கு வகிக்கிறது வசந்த பஞ்சமி அன்று.. பிப்ரவரி இரண்டாம் தேதி ஞாயிறு காலை 12 :30 மணி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி காலை 10 :12 மணி வரை பஞ்சமி திதி.


வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபட கல்வி ஞானம் ஆயக்கலைகள் 64 இந்தத் துறைகளில் சிறந்து விளங்க ஏதுவாகும். படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற நல்ல வேலை கிடைக்க அரசு பதவி உயர் பதவி தலைமை பதவி கிடைக்க வரும் ஞாயிறு அன்று பிப்ரவரி இரண்டாம் நாள் காலை 9 :14 மணி முதல் 12:33 மணி வரை சரஸ்வதி பூஜை செய்வது சாலச்சிறந்தது.


வசந்த பஞ்சமி என்பது வித்யா ஆரம்பத்தை குறிக்கிறது சிறு குழந்தைகளை கல்வி பாடல் நடனம் போன்ற கலைகளை கற்க வகுப்பில் சேர்த்து விடுவர். பள்ளி கல்லூரிகளில் சரஸ்வதி பூஜையாக கொண்டாடி கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர்.


நம் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் பிள்ளையார் வைத்து சரஸ்வதி படம் அல்லது உருவச்சிலை இருந்தால் மஞ்சள் பூக்கள் வைத்து அலங்கரித்து கேசரி லட்டு போன்ற நெய்வேத்தியம் வைத்து வழிபடுவது குடும்ப நலனுக்கு சிறப்பானதாகும்.


இந்து நாட்காட்டியின் படி பிப்ரவரி 2 அன்று பூஜை காலை 7 :09 முதல் மதியம் 12 :35 வரை சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து இன்புற்று வாழலாம். சரஸ்வதி எந்திரம் வரைந்து சரஸ்வதி துதி பாடலாம்.


"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி வித்யாரம்பம் கரிஷ்யாமி  சித்திர் பவத்துமே சதா"



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

news

முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்

news

இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்