அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!

Mar 05, 2025,05:37 PM IST

சென்னை: எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க செய்திட கூடாது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது,


அரசியலமைப்பு தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக நான் மாண்புமிகு முதல்வரின் அனுமதியோடு விடைபெறுகிறேன். நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற நிலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார். தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு  நடவடிக்கை குழு ஒன்றை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




எண்ணிக்கை வரையறு எவ்வளவு முக்கியமோ அதைப்போல தொகுதிகளில் எல்லை வரையறையும் முக்கியமானது. இந்த எல்லை வரையறை செய்வதில் ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், பட்டியல்  சமூகத்தினர், பழங்குடியினர் ஆகியோர் சிதறடிக்கப்படும் வகையில் எல்லை மறுசீரமைப்பு நடந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி வருங்காலங்களில் அவ்வாறு சமூக பிரிவினர்களின் வாக்குகளை சிதறடிக்காத வகையில் எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிகின்றோம். 


மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாநில அரசியலே தீர்மானித்துக் கொள்ளும். அதே வேளையில் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றைக்கு இருக்கின்ற அடிப்படையிலேயே தொடர வேண்டும் என்கிற கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன் வைத்திருக்கிறோம். 


மாண்புமிகு முதல்வர் அவர்களின் முன்னெடுப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க செய்திட கூடாது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த அடிப்படையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறது. முதல்வரின் முன் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய வகையில் கருத்தை தெரிவித்தது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.


அப்படியெல்லாம் இன்னிக்கு மாறாது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என பொத்தாம் பொதுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்திய நிகழ்வில் கூறிய பாஜக இன்று இந்த கூட்டத்தை தவிர்த்து இருக்கிறது. இது திமுக சொன்ன கருத்து அல்ல. அரசியல் வல்லுநர்கள் ஏற்கனவே இதுகுறித்து விவாதித்த கருத்துதான். திமுக இவ்வாறு கற்பனை செய்து அரசியல் செய்யவில்லை. திமுக இதனை பேசுவதற்கு முன்னதாகவே ஓராண்டுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய வெல்லும் ஜனநாயக  மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்