வீர தீர சூரன் படம்:ஓடிடி உரிமம் தொடர்பான பிரச்சனை முடிவு.. இன்று மாலைக்குள் படம் வெளியாகும் என தகவல்

Mar 27, 2025,04:18 PM IST

சென்னை:   ஓடிடி உரிமம்  தொடர்பான வழக்கில் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம்  வெளியிட, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அனைத்து பிரச்சனைகளும் முடிக்கப்பட்டு இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


 சித்தா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன் திரைப்படம். இவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் டிரைலரே ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்தது. இதனால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  




ஏனெனில் ஏற்கனவே இப்படம் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அஜித்தின்  விடாமுயற்சி படத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதுமே முதல் பாகம் வெளியீடு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வீர தீர சூரன் திரைப்படத்தின்   2 ஆம் பாகம் இன்று காலை வெளியாக இருந்தது.


ஆனால் அறிவித்தபடி இப்படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதாவது  படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படும்  முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவித்தால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது பி4யு முதலீட்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


மேலும் படத்தை தயாரித்த ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ரியாஷிபு, 48 மணி நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி டெபாசிட் செய்ய வேண்டுமெனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்த நிலையில் வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மேலும் 4 வாரங்கள் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால், இப்படத்தின் மீதான அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டதால் இன்று மாலைக்குள் படம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

news

3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

news

SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்