டெல்லி: நேபாள நாட்டில், திபெத் எல்லைப் பகுதியில் மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 6.35 மணியளவில் நேபாள நாட்டுக்கும், திபெத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியான லோபுச்சே என்ற இடத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நேபாள நாடு அதிர்ந்தது. அதேபோல இந்தியாவிலும் டெல்லி, பீகாரின் பல பகுதிகள் நில அதிர்ச்சியை உணர்ந்தன.

பீகாரில் பல இடங்களில் வீடுகள், குடியிருப்புகள் ஆட்டம் கண்டன. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதேசமயம், நேபாளத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பூகம்பம் ஏற்பட்ட லொபுச்சே பகுதியானது நேபாளத்தில் உள்ளது. காத்மாண்டுவிலிருந்து 150 கிலோமீட்டர் கிழக்கே, குபு பனி மலைப் பகுதியில் இது அமைந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் தரை முகாமிலிருந்து வெறும் எட்டரை கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள திபெத்துக்குச் சொந்தமான ஜிஜாங் என்ற இடமும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}