டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாட்டின் 16வது துணை குடியரசு தலைவராக இருந்து ஜெகதீப் தன்கர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடி முன்னிலையில் பாஜ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கலின்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சரத்பவார், திருச்சி சிவா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி உறுதியாகி உள்ளது.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}