சென்னை: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ள நிலையில், முதல் காட்சியைக் காண ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணியில் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக படமாக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரெஜினா கான்சென்ட்ரா மற்றும் நடிகர் அர்ஜுன்,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இப்படம் எப்போது வெளியாகும் என படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதுடன் படத்தின் ஃப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உலா வந்தனர்.
இந்த நிலையில் 200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 6ஆம் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திரையரங்கு முன்பாக உள்ள மிகப்பெரிய ராட்சத பேனருக்கு மாலை அணிவித்து டிரம்ஸ் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன், திருவிழா போல படத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காணச் சென்ற நடிகர் ஆரவ் விடாமுயற்சி படத்தை உற்சாகமாக கண்டுகளித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவிட்டு சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் ஏகே ஏகே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் விடாமுயற்சி படத்தை பார்க்க வந்த போது இப்படம் பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அஜித் சாருக்காக பேனர் போஸ்டர் ஒட்டிய பையன் நான் இப்பொழுது அவருடைய படத்தை இயக்குகிறேன். இதைவிட என் வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷம் என்ற ஒன்று கிடையாது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் அமெரிக்காவிலும் விடாமுயற்சி படம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள அஜீத் படம் என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்
வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!
தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
{{comments.comment}}