- மஞ்சுளா தேவி
சென்னை: "என்னடா செல்லங்களா... அதுக்குள்ள இவ்வளவு பெருசா வளர்ந்து விட்டீர்களா".... என்று ஆச்சரியப்பட்டு எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் பிள்ளைகளைப் பார்த்து.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளின் முதல் பிறந்தநாள் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் கடந்த வருடம் மிக சிறப்பாக திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே
தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பின்னர் நயன் விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களுக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே பதிவுத் திருமணம் ஆகிவிட்டது என விளக்கம் அளித்தனர்.
இரட்டை ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என தெரியாமலேயே இருந்தது. ஆனால் ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன் - விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுடைய குழந்தைகளின் முழு பெயரை அறிவித்தனர். ஒரு குழந்தையின் பெயர் உயிர் ருத்ரனீல் என் சிவன் மற்றும் இன்னொரு குழந்தையின் பெயர் உலக் தெய்வக் என் சிவன் என தனது குழந்தையின் முழு பெயர்களை கூறினர்.
இந்த இரட்டைக் குழந்தைகளும் இப்போது தங்களது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி குழந்தைகளின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தங்களது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என கூறியுள்ளனர் நயனும், விக்கியும். விக்னேஷ் சிவன் - நயன் தம்பதியின் குழந்தைகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்படம் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த அப்டேட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}