2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

Dec 09, 2025,05:13 PM IST
புதுச்சேரி : புதுச்சேரியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், வெறும் 14 நிமிடங்கள் மட்டுமே பேசினார். தமிழகத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு வழக்கமாக தாமதமாக வரும் விஜய், புதுச்சேரியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்தவைந்தார். புதுச்சேரியில் காலை 10.30 மணி முதல் 12.30 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என புதுச்சேரி போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர்.

பிரச்சாரம் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு தனது பிரச்சார வாகனத்தில் வந்த விஜய், அதன் மீது அமைக்கப்பட்டிருந்த மேடை போன்ற அமைப்பில் நின்று பேசினார். முன்னதாக பேசிய புஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிறப்பாக பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்ததுடன், இது போன்ற பாதுகாப்பை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு வழங்கவில்லை என குற்றம்சாட்டினர்.



பின்னர் பேசிய விஜய், தமிழ்நாடும் புதுச்சேரி வேறு வேறு கிடையாது. ஒன்று தான். புதுச்சேரி என்றாலே நினைவிற்கு வருவது மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் போன்ற இடங்கள் தான். ஆனால் அதை தாண்டி இது பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண். தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே 1974ல் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது புதுச்சேரி. அவரை புதுச்சேரி மிஸ் பண்ணினது போல தமிழகத்தில் மிஸ் பண்ணிட கூடாதுன்னு நம்மை அலார்ட் செய்தார்கள்.

புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்து நான் குரல் கொடுப்பேன். புதுச்சேரி அரசு, திமுக அரசு போல் கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் நன்றி. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொண்டால் நல்லது. அப்படி கற்றுக் கொள்ளா விட்டால் தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுப்பார்கள். புதுச்சேரி அரசில் அங்கம் வகித்தாலும் மத்திய அரசு புதுச்சேரியை கண்டு கொள்ளவில்லை. நீண்ட கால கோரிக்கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தும் இதுவரை கொடுக்கவில்லை.சட்டசபை பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தரவில்லை. இதுவரை 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக எதுவும் செய்யவில்லை. தொழிற்சாலை, ஐடி நிறுவனங்கள் என எதையும் புதுச்சேரியில் மத்திய அரசு துவக்கவில்லை. புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சருக்கு பதில் புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாட்கள் ஆகியும் இதுவரை இலாக்கா கூட ஒதுக்கவில்லை. இது சிறுபான்மையினரை அவமதிப்பதாக மக்கள் சொல்கிறார்கள். புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் புதுச்சேரிக்கு தோராயமாகவே மத்திய அரசு நீதி ஒதுக்குகிறது. இதனால் அரசு ஊழியர்கள் சம்பளம், மக்கள் திட்டங்கள் ஆகியவற்றிற்கு கடன் வாங்கும் நிலை உள்ளது.

திமுக.,வை மட்டும் நம்பாதீர்கள். தமிழகத்தை ஒதுக்கியது போல் புதுச்சேரியையும் மத்திய அரசு ஒதுக்கக் கூடாது. புதுச்சேரிக்கு முறையாக நிதி ஒதுக்குவதில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும். தொழில் வளர்ச்சியும் தேவை. இந்திய அளவில் ரேசன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் ரேசன் கடைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காகவும் துணை நிற்பான். வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும். நல்லதே நடக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்