என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

Sep 20, 2025,02:39 PM IST

நாகப்பட்டனம்: நேரடியாகவே முதல்வரிடம் கேட்கிறேன்.. என்னை மிரட்டிப் பார்க்கறீங்களா.. அதுக்கு நான் ஆள் இல்லை. அதுக்கு நாங்க ஆள் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாகப்பட்டனத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டனத்தில் இன்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பேசினார். திருச்சி, அரியலூரில் பேசியதை விட இன்றைய பேச்சு மிகவும் காட்டமாக இருந்தது. நேரடியாகவே முதல்வரிடம் என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா என்று விஜய் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்று நடந்த நாகை கூட்டத்தில் விஜய் பேசியதிலிருந்து: என் மனசுக்கு மிகவும் நெருக்கமான நாகப்பட்டனத்தில் இருந்து பேசுகிறேன்.  மீனவ நண்பனான, இருக்கிற விஜய்யோட அன்பு வணக்கங்கள். 


கப்பல்ல இருந்து இறங்கும் பொருட்களை விற்கும் கடைகள் அந்தக் காலத்தில் இங்கு இருப்பதை கேள்விப்பட்டுள்ளேன். மீன்பிடித் தொழில், விவசாயிகள் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர்தான் நம்ம நாகப்பட்டனம். மத வேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக் காட்டாக வாழும் உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கங்கள். 


அடுக்கு மொழிப் பேச்சால் காதில் ரத்தம்




தமிழ்நாட்டுல மீன் ஏற்றுமதியில் 2வது இடத்தில் இருப்பது நம்ம நாகப்பட்டனம் ஹார்பர்தான். ஆனால் அங்கு நவீன வசதிகளோட, மீன் பதப்படுத்தும் நவீன வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல் குடிசைகள் அதிகம் இருக்கும் ஊரும் நம்ம நாகப்பட்டனம்தான். இந்த முன்னேற்றத்துக்கெல்லாம் எங்க ஆட்சிதான் சாட்சி அப்பிடி இப்படின்னு அடுக்கு மொழியில் பேசிப் பேசி நாம கேட்டு கேட்டு காதுல இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவங்க ஆண்டது பத்தாதா. மக்கள் தவிக்கிறாங்களே அது பத்தாதா. 


இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதையும், காரணத்தைப் பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருந்தேன். மீனவர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை உரிமை. இன்னிக்கு நேத்தா குரல் கொடுக்கறேன். இதை நாகப்பட்டனத்தில் 14 வருடத்துக்கு முன்னாடி 2011ல் பிப்வரி 22ல் நமது மீனவரக்ளைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துனோம். இந்த விஜய் களத்துக்கு வருவது புதுசில்லை கண்ணா. எப்பவோ வந்தாச்சு.. முன்னாடி விஜய் மக்கள் இயக்கமாக வந்து நிற்போம். இப்போ தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். எப்போதும் மக்களோடு மக்களாக நிற்பது நாம. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி.


நம்ம மீனவர்களும் - ஈழத் தமிழர்களும்




நம்ம மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் அதே நேரத்தில், ஈழத் தமிழரக்ள்.. தாய்ப்பாசம் காட்டின தலைவனை இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு துணையாக இருப்பதும் நமது கடமை. மீனவர்களுக்கு துணையாக நிற்பது எவ்ளவு முக்கியமாோ ஈழத் தமிழர்களுக்கும் கரிசனம் காட்ட வேண்டும். 


மீனவர்கள் கஷ்டத்தைப் பார்த்து விட்டு கப்சிப்பென்று போக நாம ஒன்றும் கபட நாடக திமுகவினர் அல்ல. தமிழ்நாடு மீனவர்கள், இந்திய மீனவர்கள் என மீனவர்களைப் பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜகவும் கிடையாது. நிரந்தர முடிவு காண வேண்டும். அதுதான் நமது திட்டம்.


நாகப்பட்டனத்தில் மண்வளத்தைப் பாதிக்கும் இறால் பண்ணகளை முறைப்படுத்த வேண்டும். கடலோரக் கிராமங்களை மீன் வளத்தைப் பாதுகாக்கும் அலையாத்தி காடுகளைப் பாதுகாக்க வேண்டும். காவிரி நீர்த் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.. பாரம்பரிய கடல் சார்ந்த ஊரில், ஒரு அரசு மெரைன் காலேஜ் கொண்டு வரலாம். கொண்டு வந்தாங்களா. மீன் சார்ந்த எந்தத் தொழிற்சாலையும் இல்லை. வேலைவாய்ப்பு தரும் தொழில் வளர்ச்சியாவது செய்யலாம். 


முதலீடு வெளிநாட்டிலா அல்லது.. வெளிநாட்டில் முதலீடா


வெளிநாட்டு டூர் வரும்போதெல்லாம் அத்தனை கோடி இத்தனை கோடி முதலீடு என்று சிஎம் சிரிச்சுட்டே சொல்வாரே.. சிம் எம் சார்.. மனசைத் தொட்டுச் சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா.. இல்லை வெளிநாட்டுல முதலீடா.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு முதலீடா அல்லது உங்க குடும்பத்தோட முதலீடு வெளிநாட்டுக்குப் போகுதா..!


வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளை நல்லா முன்னேற்றலாம். வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கு வசதி செய்யலாம். நாகப்பட்டனம் பஸ் ஸ்டாண்டையாவது சுத்தமாக வச்சிருக்கீங்களா.


ஏன் சனிக்கிழமைகளில் கூட்டம்




நாம டூரை அறிவிச்சப்போ, அதென்னப்பா சனிக்கிழமை சனிக்கிழமை.. அது ஒன்னும் இல்லை. வந்து பார்க்கும்போது உங்களுக்கு எந்தவிதமான தொல்லையும் இருக்கக் கூடாது. வேலைகளை பாதிக்கக் கூடாது. அப்படிங்கிற ஒரே காரணத்துலதான் வீக் என்ட்டா பார்த்து திட்டமிட்டோம். 


லீவு நாட்களில் ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பதுதான் திட்டம். அது மட்டுமல்ல.. அரசியலில் சிலருக்கு ஓய்வு தரணும் இல்லையா.. அதனால்தான் இந்த ஓய்வு நாட்களை திட்டமிட்டோம். ஆனால் நமக்குத்தான் எத்தனை கட்டுப்பாடு.  அதுக்கு அவங்க கூறுவது எல்லாமே சொத்தையான காரணங்கள். அங்க பேசக் கூடாது இங்க பேசக் கூடாது.  5 நிமிஷம் 10 நிமிஷம்தான் பேசணும்.. நான் பேசுவதே 3 நிமிஷம்தான்.  அப்புறம் நான் எதைத்தாய்யா பேசறது. 


மோடி பேசினால் கண்டிஷஷன் போடுவீங்களா




திருச்சியில் நான் பேசியபோது அந்த ஏரியாவிலேயே பவர் கட். பேச ஆரம்பித்ததும் ஸ்பீக்கர் வயர் கட். தெரியாமல்தான் கேட்கிறேன் சிஎம் சார்..  உதாரணத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் வர்றால்னு பிரமதர் மோடியோ, உள்துறை அமைச்சரோ வர்றார்னு வச்சுக்கங்க. இப்படி கண்டிஷன் போடுவீங்க, பவர் கட் பண்ணுவீங்க. வயர் கட் பண்ணுவீங்க.. கொஞ்சம் கட் பண்ணித்தான் பாருங்களேன்.. பேஸ்மென்ட் அதிரும்ல..  மறைமுக உறவுக்காரர் ஆச்சே.


இதைத் தாண்டி ஒரு ரூல் போட்டாங்க. பஸ்சுக்குள்லேயே இருக்கணுமாம்.  செம காமெடியா இருக்குங்க.. நல்லா என்ஜாய் பண்றேன். நான் நேரடியாவே கேட்கிறேன். சிஎம் சார்.. மிரட்டிப் பாக்கறீங்களா.. அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை. அதுக்கு நாம ஆள் இல்லைங்க சார்.. மிஞ்சிப் போனா என்ன செய்வீங்க. குடும்பத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தா. சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்.


நான் தனி ஆள் இல்லை




உங்க என்னதான் என்ன சார்.. மக்களைப் பார்க்கக் கூடாது, குறை கேட்கக் கூடாது, அவங்க குரல் கேட்கக் கூடாது. என்னதான் உங்க எண்ணம். தமிழ்நாட்டு மகனா, சொந்தக்காரனா, என் மக்களை என் சொந்தங்களை நான் பார்க்கப் போனா என்ன பண்ணுவீங்க. அப்பவும் தடை போடுவீங்களா.


இந்த அடக்குமுறை, அரசியல் வேண்டாம் சார். நாம தனி ஆள் இல்லைங்க சார்.. மாபெரும் மக்கள் சக்தியோட பிரதிநிதிகள் சார்.. மாபெரும் பெண்கள் சக்தியோட சகோதரன் சார். மாபெரும் இளைஞர் இயக்கம் சார்.


2026ல் 2 பேருக்குதான் போட்டியே.. எனவே பூச்சாண்டி வேலை காட்டுவதை விட்டு விட்டு, தில்லா கெத்தா நேரமையா தேர்தலை சந்திக்க வாங்க சார் என்றார் விஜய்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!

news

முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!

news

மும்பையில் மோனோ ரயில் சேவை நிறுத்தம்.. மக்கள் தவிப்பு ..அடுத்தடுத்து ரிப்பேர் ஆனதால் நடவடிக்கை

news

தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

news

பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஆப்பு.. விசிக பானைக்காக போராடியது இதுக்குதான்!

news

2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?

news

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதிகம் பார்க்கும் செய்திகள்