விஜய்யின் 68வது படத்தின் பெயர் "The Greatest Of All Time".. அதிர வைக்கும் பர்ஸ்ட் லுக்!

Dec 31, 2023,06:20 PM IST

சென்னை: தளபதி விஜய் நடிக்கும் 68வது படத்தின் பர்ஸ்ட் லுக்கும், படத்தின் தலைப்பும் வெளியாகியுள்ளது.


விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை  வெளியிடப்பட உள்ளதாக ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அது வெளியாகியுள்ளது.


தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்று படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அதிர வைப்பதாக உள்ளது. இரு வேறு தோற்றத்தில் விஜய் காணப்படும் ஸ்டில் பர்ஸ்ட் லுக்காக வெளியாகியுள்ளது. இரண்டு விஜய்யும் பாராசூட்டிலிருந்து கீழே வந்து இறங்கியிருப்பது போல ஸ்டில் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிற வைப்பதாக உள்ளது. 


இதில் ஒரு விஜய் படு யூத்தாக இருக்கிறார்.. இன்னொருவர் சால்ட் அன்ட் பெப்பர் கெட்டப்பில் இருக்கிறார். 


"Light can devour the darkness but darkness cannot consume light" என்ற பன்ச் லைனே வெறியேற்றுவது போல உள்ளது. இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான மோதல் என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.. அதாவது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர்.. இதில் நன்மையும் தீமையும் விஜய்தானா அல்லது தீமைக்கு எதிராக இரண்டு நன்மைகளாக இரண்டு விஜய் போராடப் போகிறார்களா என்பது இன்னும் வெளியேற்றுகிறது


வெங்கட் பிரபு படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.




தளபதி 68, ஒரு டைம் டிராவல் படம் ஆகும். இந்த படத்தில் விஜய் இரண்டை வேடங்களில் நடிக்கிறார். பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.


சமீபத்தில் தளபதி 68 படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜனவரி மாதத்தில் இலங்கையில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று (டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் தகவல் வெளியிட்டிருந்தார்.


அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள போஸ்டரில் நீண்ட கடற்கரையில் ஒரு விமானம் பறந்து செல்வதன் நிழல் படிந்து இருப்பது போல் இருந்தது. தற்போது அந்த விமானத்திலிருந்து பாராசூட் மூலம் இரு விஜய்யும் குதித்துள்ளனர். இதனால் படத்தின் கதை விமானம் தொடர்பானது தான் என தெரிகிறது.  டைம்லைன் படம் என சொல்லப்படுவதால் மாநாடு படத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு வெங்கட் பிரபு, விஜய்க்காக கதை பண்ணியிருப்பார் என்ற எதிர்பார்த்து ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. 


புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் மிகப் பெரிய நடிகரான விஜயகாந்த்தின் இறப்பால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதால் இந்த சமயத்தில் கொண்டாட்டம் வேண்டாம் என படக்குழு முடிவு செய்து, ஃபர்ஸ்ட் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது திட்டமிட்டபடி புத்தாண்டிற்கே ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹேப்பியான நியூ இயராக இதை மாற்றியுள்ளனர்.


வழக்கமாக விஜய்யின் பிறந்தநாளில் தான் அவர் நடிக்கும் புதிய படங்களின் டைட்டில், ஃபர்ஸ்ட லுக் வெளியிடப்படும். இதற்கு முன் விஜய் நடித்த பீஸ்ட், லியோ, வாரிசு படங்களுக்கும் அப்படித்தான் வெளியிடப்பட்டது. ஆனால் தளபதி 68 படத்திற்கு மட்டும் படத்தின் ஷூட்டிங் துவங்கிய சில நாட்களில், அதுவும் புத்தாண்டிற்கு வெளியிட்டுள்ளனர். முன்கூட்டியே டைட்டில், ஃபர்ஸ்லுக்கை வெளியிடுவதால் விஜய் பிறந்தநாளுக்கு வேற லெவல் கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டிருப்பார்கள் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்