கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

Apr 21, 2025,05:15 PM IST

சென்னை: கோவையில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.


நடிகரும்  தவெக தலைவருமான விஜய் கடந்த ஆண்டு கட்சி தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய பின்னர் ஓரிரு நிகழ்ச்சியில் மட்டுமே நேரில் கலந்து கொண்டார் விஜய். இதனால், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் விஜயை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கோவையில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்கும்  தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  


தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம். 




தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில். குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன். 


இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பங்கேற்பார்கள். 26ஆம் தேதி ஈரோடு கிழக்கு மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்டம், ஈரோடு மேற்கு மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம், சேலம் வட மேற்கு மாவட்டம், சேலம் தெற்கு மாவட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் மேற்கு மாவட்டம். 


27ஆம் தேதி கரூர் மேற்கு மாவட்டம், கரூர் கிழக்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டம், கோவை தெற்கு மாவட்டம், கோவை கிழக்கு மாவட்டம், கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், திருப்பூர் மேற்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் மாநகர் மாவட்டம்,நீலகிரி கிழக்கு மாவட்டம், நீலகிரி மேற்கு மாவட்டம் ஆகிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 


இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். 


ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம். வாகை சூடுவோம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்