சென்னை: தமிழ்நாடு பாஜகவில் நடிகை குஷ்புவுக்கு மிக முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலத் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், முன்னாள் எம்எல்ஏ விஜய தாரணிக்கு இப்போதும் பதவி ஏதும் தரப்படவில்லை.
தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள், பொருளாளர், மாநில இணைப் பொருளாளர், மாநில பிரிவு அமைப்பாளர், இணை அமைப்பாளர், மாநில அலுவலக செயலாளர், தொழில்நுட்ப அமைப்பாளர், தலைமைச் செய்தி தொடர்பாளர், ஊக அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் மாநிலத் துணைத் தலைவர்களாக, சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, என். சுந்தர், டால்பின் ஸ்ரீதர், ஏஜி சம்பத், பால் கனகராஜ், ஜெயப்பிரகாஷ், மா. வெங்கடேசன், கே.கோபால்சாமி, நடிகை குஷ்பு சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதவி தரப்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் பல காலமாக இருந்தவர் விஜய தாரணி. விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக செல்வாக்குடன் திகழ்ந்து வந்தவர். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வந்தார். ஆனால் பாஜகவில் அவருக்கு இதுவரை எந்தப் பதவியும் தரப்படவில்லை. அவர் ராஜினாமா செய்த விளவங்கோடு இடைத் தேர்தலில் கூட விஜய தாரணிக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
தனக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கப்படவில்லையே என்று பாஜக மேடையிலேயே பகிரங்கமாக குமுறலையும் வெளியிட்டிருந்தார் விஜய தாரணி. அண்ணாமலை தலைவராக இருந்தபோதும் பதவி ஏதும் தரப்படாத நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் பதவிக்காலத்திலும் கூட அவருக்கு இன்னும் பதவி கொடுக்கப்படாமல் இருப்பது விஜய தாரணி தரப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பாக ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இன்னும் பதவிகள் உள்ளன. எனவே இதை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள். பதவிகள் உள்ளன. பொறுத்திருப்போம் என்று கூறியுள்ளார் விஜய தாரணி.
நீங்கள் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சிக்குப் போகப் போகிறீர்களாமே என்ற கேள்விக்கு அது தவறான செய்தி. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் விஜய தாரணி.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}