சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பற்றிய பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய பல பேட்டிகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜயகாந்த் உடன் தனக்கு எப்படி திருமணம் நடந்தது, பெண் பார்க்க வந்த அனுபவம், விஜயகாந்த் உடனான திருமண வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு விஜயகாந்த் மீது முதல் முறையாக எப்போது காதல் வந்தது என்ற சுவாரஸ்யமான மலரும் நினைவுகளை பிரேமலதா தற்போது பகிர்ந்துள்ளார்.
டிசம்பர் 28ம் தேதியுடன் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதனால் விஜயகாந்த்தை பெருமைப்படுத்தும் வகையில் அவர் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை தேர்வு செய்து 13 மணி நேரத்தில் பாடும் சாதனை நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடத்தப்பட்டது. தி.நகர் பிட்டி தியாகராயர் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஜிஜி கவிதாவின் இன்னிசை மழை குழு வழங்கிய இந்த நிகழ்ச்சியில்150 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோமதி ஞானப்பிரகாசம் தலைமையிலான குழு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் நடித்த சில பாடல்களை பிரேமலதா விஜயகாந்த்தும் பாடினார். பல பாடல்களை பாடும் போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கவும் செய்தார். இந்த விழாவில் பேசிய பிரேமலதா பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது: விஜயகாந்த் நடித்த பாடல்களை எப்போது கேட்டாலும் என்னுடைய கல்லூரி காலத்திற்கே சென்று விடுவேன். விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கம், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் அவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் கண்டு ரசித்திருக்கிறேன்.
நான் கல்லூரியில் படிக்கும் போது, பொங்கல் லீவுக்கு ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு சென்ற போது என் அப்பா வேலை செய்த கிராமத்து பின்னணியில் தியேட்டருக்கு சென்று உழவன் மகன் படம் பார்த்தேன். அதில் வரும், "உன்னை தினம் தேடும் தலைவன்" பாடலை கேட்டு தான் அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. ஒரு நடிகராக திரையில் நான் ரசித்த நடிகரை, கடவுள் எனக்கு கணவராகவும் தந்தார். இப்போதும் உன்னை தினம் தேடும் தலைவன் பாடல், ஆடியில சேதி சொல்லி ஆகிய பாடல்களை கேட்கும் போது என்னும் கல்லூரி கால நினைவுகளுக்கு சென்று விடுவேன் என தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்-பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் திருமணம் முழுமுழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு இப்படி காதல் சுவாரஸ்ய நிகழ்வுகள் இருக்கும் என்பது இதுவரை யாரும் அறியாத ஒரு விஷயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}