சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பின்னரும் கூட திரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவரது ஏஐ உருவம் சமீபத்தில் கோட் படத்தில் இடம் பெற்று அசத்தியது. இப்போது அவரது நடிப்பில் இடம் பெற்ற பாடல் பட்டையைக் கிளப்பி வருகிறது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த்தின் நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே விளையாட்டை மையப்படுத்தி பல்வேறு படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த பலப்படங்கள் வெற்றி பெற்றவும் செய்துள்ளது. இப்படங்கள் மக்கள் மனதை கவர்ந்தும் சரித்திர படங்களாகவும் மாறி வருகின்றன.
அந்த வரிசையில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவான லப்பர் பந்து திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தமிழரசன் பச்சமுத்து. இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிராமத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரராக களமிறங்கிய அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அட்டகத்தி தினேஷின் இளமை மற்றும் வயது முதிர்ந்த கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் பார்க்கிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரப்பர் பந்து படத்தில் எதிரணியாக விளையாடும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பும் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
முதலில் இப்படம் தமிழ்நாடு முழுவதும் 200 திரையரங்குகள் வரை மட்டுமே வெளியானது. ஆனால் இப்படத்தின் கதை களம், நடிப்பு போன்றவற்றிற்கு மக்களிடையே ஆதரவு வலுத்து வரும் நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முதல் நாளிலேயே 70 முதல் 75 லட்சம் வசூல் செய்தாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் லப்பர் பந்து படத்தில் முழுக்க முழுக்க கேப்டனை நினைவுபடுத்தும் வகையில் கடந்த 1989 ஆம் ஆண்டு மறைந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மன செல்வன் படத்தில் இளையராஜா இசையில் கங்கை அமரன் வரிகளில் மலேசியா வாசுதேவன் பாடிய நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}