சென்னை; வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் நாளை தவெக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நள்ளிரவு 2 மணியளவில் எம்பிக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டும் இன்றி இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டும் வருகிறது.
இத்தகைய எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து வக்பு வாரிய திருத்த மேசாதா நிறைவேறி இருக்கும் நிலையில், தவெக தரப்பில் நாளை போரட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}