சென்னை: அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம் என்ற பாடலுக்கு ஏற்ப அஜித்குமார் தனது காதல் மனைவி ஷாலினியுடன் ஸ்பெயின் நாட்டு வீதியில், யாருடைய தொந்தரவும் இல்லாமல் படு ஜாலியாக கேஷுவலாக வலம் வரும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக புகழ்பெற்றவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக தயாராகி வருகிறது. இதற்காக அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
முன்னதாக முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த நடிகை ஷாலினியும் அஜித்தும் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலரவே கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
அஜித் மகன் ஆத்விக்கிற்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். இதற்காக பல்வேறு போட்டிகளில் கலந்து வரும் வீடியோவை நடிகை ஷாலினி அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் ஸ்பெயினில் நடக்கும் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக அஜித் தனது குடும்பத்துடன் ஸ்பெயின் சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அப்போது அங்கு அஜித் ஷாலினி இருவரும் தங்கள் கண்களில் காதலை பரிமாறும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவை வெளியிட்டு ஒன்றாக இருப்பதற்கு ஏற்ற இடம் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாலினி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஸ்பெயின் நகர சாலையில் பிளாட்பாரத்தில் கணவர் அஜீத்துடன் ஜாலியாக கை கோர்த்தபடி ஷாலினி வருகிறார். அவரே செல்பி மோடில் வீடியோ எடுத்துள்ளார். ஒரு சாதாரண கணவராக மனைவியுடன் சமர்த்தாக நடந்து வருகிறார் அஜீத். அவர் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம், அட இந்தப் பக்கம் வாங்க என்பது போல வீடியோவை அவர் பக்கம் திருப்புகிறார் ஷாலினி, அதைப் பார்த்து விட்டு அஜீத்தும் கேமராவுக்குள் வந்து தலையைக் காட்டுகிறார்.
செம க்யூட் வீடியோ நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்
உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}