சென்னை: உலக மக்கள் அனைவரும் அவரவர்கள் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் உலக பாரம்பரிய வாரம் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல முன்னெடுப்புகளையும் அது மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய தொன்மை வரலாறு கொண்ட சுற்றுலாத் தலங்களில் இதுதொடர்பான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியத்தின் தொன்மையையும், மேம்பட்ட நாகரிகத்தையும் பறைசாற்றும் வகையில் கீழடியில் ஒரு அருங்காட்சியகம்
அமைந்துள்ளது. இங்கு தமிழர் நாகரிகத்தின் சான்றுகளாக கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் காணொளி வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுகிறது. பெரியோர்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் ஆர்வத்துடன் அருங்காட்சியக பொருட்களை பார்வையிட்டு வருகின்றனர்.
இது பற்றி கல்லூரி மாணவர்கள் கூறுகையில் காணொளிகள் மிகவும் விளக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த காணொளிகளை பார்த்தாலே போதும் , யாருடைய உதவியும் இன்றி கீழடி பொருட்களை பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளிகள் மிகவும் உதவியாக உள்ளது என்றும் கூறினர்.
இதேபோல, தமிழர்களின் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் சிற்பங்கள். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரைச் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்வையிடுவதற்கு நமது சுற்றுலாத்துறை ஆவண செய்துள்ளது.
கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம் முதலான அரியவகை சிற்பங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.
கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? வாடிக்கையாளர்களுக்கு சாதகமா? பாதகமா?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்
துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
களை கட்டியது உலக பாரம்பாரிய வாரம்.. நீங்க கீழடி போய்ட்டு வந்துட்டீங்களா.. கிளம்புங்க முதல்ல!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 20, 2025... இன்று பணம் கைக்கு வரும் நாள்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
{{comments.comment}}