சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபாக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல்வர் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடு நீக்குதல், வாக்காளர் பட்டியலில் புகைப்படங்களை இணைத்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனை அடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்த, ஏற்கனவே வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ள பதிவுகள் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கும் விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}