வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

Mar 05, 2025,05:37 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என மக்கள் அச்சப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும்  மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகாலையில் லேசான பொழிவு இருந்தாலும் கூட மதிய வேலைகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவலால் இனி வரும் நாட்களில் வெப்ப அலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தற்போது வெயில் தலைக்காட்ட துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா எனவும்  மக்களிடையே அச்சம் ஏற்பட்டு வருகிறது. 



சென்னைக்கு குடிநீர்ப் பிரச்சினை வராது

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 9.618 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரம்:

பூண்டி நீர்த்தேக்கம்:

35 அடி (3231 மில்லியன் கன அடி) கொள்ளளவான பூண்டி ஏரியில் தற்போது 87.34 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம்:

24 அடி (3645 மில்லியன் கன அடி) மொத்த கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 91.08 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது.

புழல் அல்லது செங்குன்றம்:

மொத்த கொள்ளளவான 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)  கொண்ட புழல் ஏரியில் தற்போது 87.94 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

சோழவரம்:

மொத்த கொள்ளளவான 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 12.86 சதவிகிதமாக உள்ளது. 

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 

மொத்த கொள்ளளவான 36.61 அடி (500 மில்லியன் கன அடி) கொண்ட கண்ணன் கோட்டை ஏரியில் தற்போது நீர் இருப்பு 87 சதவீதமாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்