சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே கோடை காலம் துவங்கி விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை வெயிலின் தாக்கம், மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர். மக்களின் அச்சத்தைப் போக்க நீர்வளத் துறை அதிகாரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு இருப்பதாகவும், ஏப்ரல் மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது எனவும் ஏற்கனவே தகவல் தெரிவித்தனர். இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும், பருவநிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகம், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிதமான மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளவான
13.21 டிஎம்சி யில் தற்போது 9.97 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இன்றைய காலை நிலவரப்படி,சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு பின்வருமாறு,
பூண்டி நீர்த்தேக்கம்:
மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 33.77 அடி (2752 மில்லியன் கன அடி)
செங்குன்றம் அல்லது புழல்:

மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு -18.55அடி (2720 மில்லியன் கன அடி)
3. சோழவரம்
மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 3.20 அடி (138 மில்லியன் கன அடி)
செம்பரம்பாக்கம்:
மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 22.22 அடி (3177 மில்லியன் கன அடி)
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை:
மொத்த கொள்ளளவு - 3661 அடி (500 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 33.98 அடி ( 415 மில்லியன் கன அடி)
வீராணம்:
மொத்த கொள்ளளவு -8.50 அடி (1456 மில்லியன் கன அடி)
நீர் இருப்பு - 5.55 அடி ( 765 மில்லியன் கன அடி)
WHERE TRUST LIVES....
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
{{comments.comment}}