சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 40198 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக தமிழக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததினால், 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பருவ மழை சற்று குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததினால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன்பின்னர் மீண்டும் கர்நாடகவில் பருவ மழை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்ததால், இன்று மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அடியாக அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் இன்று மீண்டும் அணையின் நீர் மட்டம் 120.41 அடியாக உயர்ந்தது. அணை நீர் மட்டம் உயர்ந்ததினால், பவர் ஹவுஸ், 16 கண் பாலம், கால்வாய் ஆகியவற்றின் வழியாக அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
கடல் ஒரு கவிதை!
{{comments.comment}}