சென்னை: இந்தியா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட அனைத்துத் தலைவர்களும் ஆவலாக காத்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்து விட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆனால் இதுவரை வெளியான பெரும்பாலான எக்சிட் போல்களில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவற்றை முற்றாக நிராகரித்து விட்டனர் இந்தியா கூட்டணியின் தலைவர்கள். மேலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தங்களது வெற்றி உறுதி என்றும் அவர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். உற்சாகமாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய், வெற்றியைக் கொண்டாட காத்திருப்பதாக இன்று அதிரடியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் தலைவர்கள் கருணாநிதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பாக ஸ்டாலின் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா கூட்டணியின் தலைவர்களான சோனியா காந்தி, அன்புத் தம்பி ராகுல் காந்தி, மதிப்புக்குரிய பரூக் அப்துல்லா, தோழர்கள் சீதாராம் எச்சூரி, டி. ராஜா ஆகியோர் டெல்லியில் முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த குழுமியிருந்தனர். அவரை ஒரு பிராந்திய தலைவராக இல்லாமல், தேசிய தலைவராக நாம் பார்க்கிறோம் என்பது பெருமைக்குரியதாகும்.
ஜனநாயகத்தையும், கூட்டாட்சியின் மகத்துவத்தையும் காக்க தொடர்ந்து குரல் கொடுத்தவர் கலைஞர். தேசத்தை கட்டியமைப்பதில் அவரது பங்கும் குறிப்பிடத்தக்கது. கடும் இக்கட்டான சூழலிலும் கூட மத்தியில் ஆதரவு கொடுத்து நிலையான ஆட்சி நடத்த உதவியவர்.
பிரதமர்களையும், குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர். நாட்டின் அரசியல் முகத்தையே மாற்றியமைத்தவர். அவரது பிறந்தநாளான இன்று அதே வேகத்தோடும், வீரியத்தோடும், ஜூன் 4ம் தேதி இந்திய மக்களின் வெற்றியை, இந்தியா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
வெற்றி உறுதி என்பது போலவே இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து உத்வேகத்துடன் பேசி வருவதால் பாஜக வட்டாரமும் சற்று கலக்கத்துடனேயே அனைத்தையும் பார்த்து வருகிறது.
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}