மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!

Nov 21, 2025,06:37 PM IST

சென்னை: தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி தமிழக  அரசு விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.


இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதவில், 




AIIMS-உம் வராது, MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.


அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்! என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்குப் புதிய சிக்கலா? 500% வரி விதிப்பு மசோதாவிற்கு டிரம்ப் ஆதரவு

news

சாலையோர பூக்கள்....!

news

கட்சியிலேயே இல்லாத அன்புமணி எப்படி கூட்டணி பேச முடியும்?...பாமக ராமதாஸ் அதிரடி

news

ஓபிஎஸ்.,க்கு அதிமுகவிலும் இடமில்லை... கூட்டணியிலும் இடமில்லை... இபிஎஸ் திட்டவட்டம்

news

இன்றைய தங்கம் விலை ஏற்றமா?.. இறக்கமா?.. இதோ முழு விபரம்!

news

ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

news

Extra-curricular activities.. மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்பதை ஊக்குவிப்போம்!

news

பெருகும் முதியோர் இல்லங்கள்.. வருத்தம்தான்.. ஆனாலும் ஒரு பாசிட்டிவ் பாயின்ட் இருக்கே!

news

இந்தியாவின் தாஜ்மஹால்.. காலத்தைத் தாண்டி நிற்கும்.. கம்பீர காதல் சின்னம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்