சென்னை: தமிழக வானிலை முன்னறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தொடர்ந்து ஹிந்தி மொழியும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் சென்னை வானிலை ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு,புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளின் தினசரி வானிலை நிலவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுவது வழக்கம். இதற்கான அதிகாரப்பூர்வ தனி இணையமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தி அறிக்கையும் சேர்த்துள்ளது.
மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்பிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வானிலை முன்னறிவிப்பில் ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சு. வெங்கடேசன் கண்டனம்
இது குறித்து எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் இதை எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}