சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழ்நாட்டில் டிசம்பர் 10 முதல் நான்கு நாட்கள் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் ஓய்ந்துள்ளது. அதற்குள்ளாக வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதே சமயத்தில் இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக 18 சதவீதம் பெய்துள்ளது. தற்போது வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்ந்து உருவானால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து மழை அதிகரிக்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தலின்படி தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 11ஆம் தேதி வாக்கில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 10 ,11,12, மற்றும் 13 ஆகிய நான்கு நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
டிசம்பர் 10ம் தேதி கன மழை:
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் பத்தாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 11ஆம் தேதி கனமழை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதி மிக கனமழை:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதுவையிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 12ஆம் தேதி கனமழை:
காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
{{comments.comment}}