சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் இதோ ரிலீஸ் நெருங்கி விட்டது. இன்னும் 2 நாட்கள்தான். இந்த நிலையில் அப்படத்தில் நடித்த ஸ்டார்களின் சம்பளம் குறித்த ஒரு செய்தி உலா வந்து கொண்டுள்ளது.
ரஜினிகாந்தின் அடுத்த படமான கூலி திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வர உள்ளது.
கூலி படத்தின் முன்பதிவு விற்பனையில் பெரும் சாதனை படைத்து வரும் நிலையில், அதில் நடித்த நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் தற்போது உலா வருகின்றன. இவை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து டெக்கான் ஹெரால்டு இதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் ரஜினிகாந்த்துக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் படத்தின் பிரீ ரிலீஸ் டிக்கெட் விற்பனை நன்றாக இருப்பதாலும் படம் குறித்து பாசிட்டிவ் டாக் உலா வருவதாலும் தற்போது சம்பளத்தை ரூ. 200 கோடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத செய்தி.
பாலிவுட் நடிகர் ஆமிர் கான், ரவுடி தாஹா என்ற சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த சிறு தோற்றத்திற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, ரஜினிகாந்துடன் நடிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சைமன் என்ற அவரது கதாபாத்திரத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம்.
பாகுபலி புகழ் சத்யராஜ், ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது. அதேபோல கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் ரூ. 5 கோடி சம்பளம்தானாம்.
பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுருதி ஹாசன், 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாம். ரஜினிக்கு அடுத்து இப்படத்தில் அதிக சம்பளம் வாங்கியுள்ளவர் லோகேஷ்தானாம். அனிருத்துக்கு ரூ. 15 கோடி சம்பளமாம்.
ரஜினிகாந்தின் கூலி படம், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2 படத்துடன் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மோதவுள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்னிக் என்ற வர்த்தக வலைத்தள செய்தியின்படி, கூலி திரைப்படம் முன்பதிவில் 14 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதே நேரத்தில் வார் 2 படம் 2.08 கோடி ரூபாய் மட்டுமே முன்பதிவில் ஈட்டியுள்ளது.
கூலி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகளை விற்றுள்ளது. அனைத்து புக்கிங்குகளையும் சேர்த்தால், அதன் முன்பதிவு 20 கோடி ரூபாய்க்கு அருகில் இருக்கும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி உருவாகியுள்ளது. ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் சரியாகப் போகவில்லை என்பது நினைவிருக்கலாம்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}