- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
ஆட்டிசம், மாற்றுத்திறனாளி போன்ற குழந்தைகள் பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வாங்க உங்க கேள்விக்கு விளக்கத்தைப் பார்ப்போம்.
உலகப் பிறவிக்குழாய் குறைபாடு விழிப்புணர்வு நாள் மார்ச் 25 அன்று அனுசரிக்கப்பட்டு, இந்த நாள் சில நாடுகளில் “Unborn Child Day” எனக் கொண்டாடப்பட்டது.
கருவில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்படைய பிறவிக்குழாய் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக இந்த நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பிறவிக் குறை என்பது மரபு வழியாகவோ அல்லது நிறப்புரி பிறட்சிகள் மூலமாகவோ அல்லது கருத்தரிப்பு காலங்களில் ஏற்படும் சில தொற்று போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. கருத்தரிப்பு காலங்களில் ஏற்படும் உயிர்ச்சத்து பி குறைபாடு, மது அருந்துதுதல் அல்லது புகையிலை பிடித்தல் மற்றும் கட்டுப்படுத்த இயலாத நீரிழிவு நோய் அல்லது 35 வயதிற்கு மேல் கருத்தரித்தல் போன்றவற்றினாலும் பிறவிக்குறை ஏற்படுகிறது.
பிறவி குழாய் குறைபாடு (Neural Tube Defects - NTDs) என்பது கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் (கருத்தரித்த 3-4 வாரங்களில்) குழந்தையின் மூளை அல்லது தண்டுவடத்தை உருவாக்கும் குழாய் முழுமையாக மூடாமை, இதனால் மூளை மற்றும் முதுகெலும்பில் ஏற்படும் தீவிர பிறப்பு குறைபாடுடைய குழந்தைகளாக பிறப்பது ஆகும் .
கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் ஃபோலிக் அமிலம் (Vitamin B9) குறைபாடு, மரபணு காரணங்கள், மற்றும் தாயின் ஆரோக்கிய நிலை போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக கிடைக்க வேண்டும். இவை போதிய அளவு கிடைக்கவில்லை எனில் பிறக்கும் குழந்தை பாதிப்படைகிறது.
பிறவி குழாய் குறைபாடுகளின் வகைகள்:

ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida): முதுகெலும்பு முழுமையாக மூடாத நிலையில் கரு காணப்படுதல்.
அனென்ஸ்பாலி (Anencephaly): மூளையின் முக்கிய பகுதிகள் மற்றும் மண்டை ஓடு உருவாகாத நிலையில் கரு காணப்படுதல்.
என்செபலோசெல் (Encephalocele): மூளை திசுக்கள் மண்டை ஓட்டில் உள்ள துளை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் நிலையில் கரு காணப்படுதல்.
பிறவி குழாய் குறைபாடுகளை தடுக்கும் முறைகள்:
கர்ப்பம் தரிப்பதற்கு முன்னும், கர்ப்பத்தின் முதல் சில வாரங்களிலும் போதுமான அளவு ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்வது இந்த குறைபாடுகளை 70% வரை தடுக்கப்படுகிறது.
சிகிச்சை முறைகள்:
பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது. ஆனால் சில வகைகள் உயிருக்கே ஆபத்தானவையாகவும் அமைகின்றன.
சீரான உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு அவசியம் தேவை என்பதை அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தீய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து அவற்றை கைவிட வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். பிறவிக்குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய பரிசோதனைகள் அவசியம் செய்ய வேண்டும். கருவில் குழந்தை வளர்ச்சி முறையாக இருக்க வேண்டும். தாயின் மனநிலை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து பார்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மனதில் கவலை இல்லாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நலமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பெண்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு முக்கிய பங்களிக்கிறது. பிறவிக்குறைபாடுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை அவசியம் தேவைப்படுவதோடு, குடும்ப ஆதரவு கர்ப்பிணி பெண்களுக்கு முக்கியமாகும். எதிர்கால தலைமுறையினர் நலனை காக்கிறது.
இவ்வகையான குறைகளை திறத் தணிக்கைச் சோதனையின் மூலமாகவோ அல்லது பிறப்பின் போதிலோ கண்டறிய முடிகிறது. பிள்ளைப் பேறுக்கு முன்பான சோதனையின் மூலம் பல நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதற்கு மருத்துவ வசதிகள் இப்பொழுது வந்துவிட்டன.
அவசியம் பின்பற்ற வேண்டியவை :
கர்ப்பமாக இருக்கும் பொழுதும் மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்து வகையான Blood test, scan test போன்றவற்றை எடுப்பதோடு அவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை சரியாக சாப்பிட வேண்டும்.
கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது .
சர்க்கரை நோய், தைராய்டு, பரம்பரை நோய்கள் போன்றவை இருந்தால் மருத்துவரிடம் மறைக்காமல் அவற்றைக் கூறி அதற்கு ஏற்ற மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பொழுது நாம் நல்ல சத்தான உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது நாம் எந்த ஒரு கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மேலே கூறப்பட்டதை பின்பற்றாத போது தான் பிறக்கும் குழந்தை ஊனமாகவோ, மாற்றுத்திறனாளியாகவோ, ஆட்டிசம் குழந்தைகளாகவோ பிறக்கிறார்கள் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களில் விழிப்புணர்வோடு செயல்படுவோம்.
ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தின் வளம் என்பதை உணர்ந்து பல உயிர்களை காப்பாற்ற முயற்சி செய்வோம். ஆரோக்கியமாக வாழ்ந்து காட்டுவோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
நினைவுகளை (நினைக்கும்) நனைக்கும் ஒரு நாள்!
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
நீரும் வாழ்வும்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
முயற்சியும் தோல்வியும்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
ஆட்டிசம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
{{comments.comment}}