சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது மிகப் பெரிதாக இருக்கும். சுருக்கமாக சொல்வதானால், தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனே கூட அதிமுகவை விட்டுப் பிரிந்து போனவர்தான்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒரு பிளவு ஏற்பட்டது. ஜானகி அம்மையார் தலைமையில் ஒரு பிரிவம், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் உருவானது. அதன் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜானகி அணி படு தோல்வியைச் சந்தித்தது. அவர் உள்பட அனைவருமே தோற்றனர். ஆனால் ஜெயலலிதா அணிக்கு 21 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்று விட்டார் ஜானகி அம்மையார்.

அதேசமயம், ஜெயலலிதா மறைந்த சமயத்தில் கட்சிக்குள் பிரச்சினை வெடித்தது. ஆனால் உடனடியாக அது உடையவில்லை. மாறாக சசிகலா தரப்புடன் அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவருமே இணைந்துதான் இருந்தனர். ஆனால் சசிகலா முதல்வர் பதவிக்கு வர திட்டமிட்டதை உணர்ந்து ஓபிஎஸ் முதலில் வெளியேறினார். அவரது தலைமையில் சில மூத்த தலைவர்கள் வெளியேறி வந்தனர். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் சிறைத் தண்டனை உறுதியானதால் அவர் சிறைக்குச் செல்ல நேரிட்டது. அதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டு அவர் போனார். அதன் பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. இந்த முறை டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதனால் தினகரன் தலைமையில் ஒரு பிரிவு அதிமுகவிலிருந்து கிளம்பியது. அந்தக் குழுவில்தான் செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் இடம் பிடித்திருந்தனர்.
இப்படியாக படிப்படியாக அதிமுக கரைந்து வந்த நிலையில் பிறகு ஓபிஎஸ் மட்டும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அதன் பிறகு அவரையும் நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொல்கிறார். அப்படிப் பார்த்தால் ஏகப்பட்ட பேர் உள்ளனர். அதில் யாரையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று அவர் சொல்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. யாரைச் சேர்க்க வேண்டும் என்பதையும் எடப்பாடி பழனிச்சாமியே முடிவு செய்யட்டும் என்றும் சொல்கிறார் செங்கோட்டையன்.
சரி.. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு யாரெல்லாம் வெளியேறினார்கள் என்று பார்த்தால் அது பெரிய லிஸ்ட்டாக இருக்கிறது. ஓபிஎஸ், தினகரன், சசிகலா, தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, நயினார் நாகேந்திரன், அன்வர் ராஜா இப்படி லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும். பார்க்கலாம்.. அடுத்து வரும் நாட்கள் நிச்சயம் அதிமுகவில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}