கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?

Sep 16, 2025,12:01 PM IST

சென்னை : கைக்கூலிகள் யார் என அடையாளம் காணப்பட்டு விட்டார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பேசி உள்ளதால், அவர் யாரை கைக்கூலிகள் என குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு இபிஎஸ்.,ன் சூசக பேச்சு இவர் என்ன சொல்ல வருகிறார்? யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்விகளை எழுப்பி உள்ளார்.


நேற்று நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "கைக்கூலிகள் யார் என்று அடையாளம் காணப்பட்டு விட்டார்கள். கைக்கூலிகளை வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்" என்றார்.  கைக்கூலிகள் என செங்கோட்டையனை தான் அவர் குறிப்பிடுகிறாரா அல்லது செங்கோட்டையனை போல் இன்னும் பலர் கட்சிக்குள் இருந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள் என்பதால் அவர்கள் அனைவரையும் சேர்த்து கைக்கூலிகள் என்றாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதோடு கைக்கூலிகள் என்றால் அவர்கள் யாருடைய கைக்கூலிகளாக இருந்து செயல்படுகிறார்கள் என இபிஎஸ் குறிப்பிடுகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.




அதிமுக தலைமை கழகத்தை அடித்து நொறுக்கியவர்களையும், 18 எம்எல்ஏ.,க்களை கடத்திச் சென்று அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்பவர்களை எப்படி கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுக.,வில் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதை மறைமுகமாக தெரிவித்து விட்டார். 


அது மட்டுமல்ல, அவர் பேசும் போது, எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தி உள்ளார். இதனால் தேர்தல் வெற்றியை அவர் பெரிதாக நினைக்கவில்லையா? அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பதை விட என்ன முக்கியம் என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி எடப்பாடி பழனிச்சாமி பேசிய ஒவ்வொரு விஷயமும், பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. 


இன்று காலை டில்லி புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியிடம், அமித்ஷாவை சந்திப்பீர்களா என கேட்ட போது அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார். இதனால் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. டில்லியில் இருந்து திரும்பியதும், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடுவார் என நேற்று வரை மீடியாக்களில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நேற்றைய பேச்சில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. 


அதிமுக.,வில் யாருக்கெல்லாம் இடம் இல்லை என்பதை நேற்று தெளிவாக சொல்லி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் டில்லி சென்று திரும்பியதும் செங்கோட்டையன் விவகாரத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கூட்டணி குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

news

மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!

news

இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி

news

கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?

news

காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்