ரமலான்.. இஸ்லாமியர்களின் பெரு நாள், புனித நாள்.. சமூக நல்லிணக்கத்தின் திருநாள்!

Mar 31, 2025,10:23 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்ச் 31ஆம் தேதி 2025 திங்கட்கிழமை ரமலான் பண்டிகை இஸ்லாமிய மதத்தினர் அனைவரும் கோலகலமாக கொண்டாடுகின்றனர்.

ஈத் -உல்- பித்ர் ,புனித ரமலான் மாதத்தின் இறுதியையும் இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின்  தொடக்கத்தையும் குறிக்கிறது. ஈத்  -உல் -பித்ர் முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பு நாள்.


இது உண்ணா நோன்பு, தொழுகை, ஆன்மீகப் பிரதிபலிப்பு மாதமான ரமலான் மாதத்தின் இறுதியை குறிக்கிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் ஈத் -அல் -பித்ர் மற்றும் ஈத்- அல் -அதா ஆகிய இரண்டு ஈத் பண்டிகைகள் உள்ளன.


ரமலான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இது ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ஆகும். மற்றும் உலகம் முழுவதும் முஸ்லிம்களால் நோன்பு நோற்கப்படும் நேரம் ஆகும்.


நோன்பு  நோற்பது:




பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் நேர்மையான வாழ்க்கை நடத்துவர்.


தகவல் (தகவல் உணர்வு):


பசி, தாகம் அனுபவிப்பதன் மூலம் ஏழைகளின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு உதவுதல். இறை வழிபாடு அதிகரித்தல்: தொழுகை, ததிக்ர் , தானம் மற்றும் பிற நல்ல செயல்களில் ஈடுபடுதல். 


நோன்பு நோற்கும் முறை:


ஸஹர்( sehr/suhur)-   காலை முதல் நேரம் பகல் பஜ்ருக்கு( Fajr)  முன்பு உணவு உட்கொள்ளுவது.

இப்தார் (Iftar)  - சூரியன் மறைந்த உடன் நோன்பை முறித்து பேரிச்சம்பழம், தண்ணீரால் நோன்பு  துறக்கப்படுகிறது .


திருக்குர்ஆன் ஓதுவது மிகவும் முக்கியமானது.


ரமலான் முக்கிய இரவுகள்:


லய் லத்துல் காதர் (Laylatul Qadr) ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு என்று கூறப்படுகிறது .இது ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒன்று.


ஈதுல் பித்ர் ( Eid - ul - Fitr)ரமலான் மாத இறுதி அன்று புதிய நிலவு காணப்பட்ட பிறகு ஈதுல் பித்ர் என்ற பெரிய பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.


தகவத்துல் கத்ர் (அருள் இரவு) ரமலானின் கடைசி பத்து நாட்களில் குறிப்பாக 27 வது இரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.


சகாத்தும், ஸதகாவும் ஏழை எளியவருக்கு உதவுவது மிக முக்கிய கடமையாகும்.


இன்று ரமலான் சிறப்பு தொழுகையும் ,பரஸ்பர வாழ்த்துக்களும், தர்மங்களும் வழங்கப்படும். ரமலான் மாதம் என்பது பக்தி, பொறுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான மாதமாகும் .இன்றைய நாள் ரமலான் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


ரமலான் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள். தெரிவிப்பது   தென் தமிழ் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்