சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அவரது கட்சிப் பெயரும் இப்போது பேசு பொருளாகியுள்ளது. கட்சிப் பெயரில் இடம் பெற்றுள்ள வெற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெற்றி என்ற பெயருக்கும் விஜய்க்கும் நிறைய தொடர்புகள் உண்டு. விஜய் என்ற பெயருக்கே வெற்றி என்றுதான் அர்த்தம். அந்த "வெற்றி"யில்தான் விஜய்யும் அறிமுகமாகிறார்.. !
ஒரு பிளாஷ்பேக்!

1984ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான படம்தான் "வெற்றி". எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் விஜய் சிறுவனாக தோன்றியிருப்பார். அப்படத்தில் நடித்தபோது அவரது வயது 10. இதுதான் அவரது முதல் படமும் கூட. தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான படங்களில் சிறுவனாக தோன்றி வந்த விஜய், பின்னர் நாளைய தீர்ப்பு மூலம் நாயகனானார்.
"வெற்றி" படம்தான் அவரது முதல் சினிமா படம் என்பதால் அதை நினைவு கூறும் வகையிலும், தனக்கு இனி எல்லாமே வெற்றியாக அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும், தமிழகம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையிலும் அந்தப் பெயரையே ராசியாக வைத்து விட்டார் விஜய் என்று கூறப்படுகிறது.

மேலும் கிட்டத்தட்ட விஜயகாந்த் போலவே தனது அரசியலையும் தொடங்கியுள்ளார் விஜய். விஜயகாந்த்தும் இப்படித்தான்.. அரசியலுக்கு வருவேன் என்றார்.. சத்தம் போடாமல் தனது ரசிகர்களை தொண்டர்களாக மாற்றினார்.. அப்படியே அதை கட்சியாக மாற்றினார்.. எந்த நீட்டிமுழக்குலும் இல்லை.. வழ வழா கொழ கொழா இல்லை.. சொன்னார் செய்தார்.. வென்றார்.. அரசியலில் நின்றார்.
கிட்டத்தட்ட அதே பாணியில்தான் விஜய்யும் இறங்கியுள்ளார். நல்ல வயதில்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். இதுதான் மிகச் சரியான வயது.. உடம்பில் நல்ல தெம்பு இருக்கிறது.. நல்ல அனுபவம் இருக்கிறது... மக்களிடம் நல்ல அன்பும் இருக்கிறது.. குறிப்பாக இளைஞர்கள், பெண்களிடம் மிகப் பெரிய அன்பை சேகரித்து வைத்திருக்கிறார் விஜய். "ஹேட்டர்கள்" எல்லோருக்கும்தான் இருப்பார்கள்.. எல்லா இடத்திலும்தான் இருப்பார்கள்.. ஆனால் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவது, தெளிவாக நடை போடுவது, ஸ்திரமான செயல்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும்போது நிச்சயம் அது வெற்றியைத் தேடித் தரும்.
சரியான நேரத்தில் சரியான முடிவு

அந்த வகையில் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்.. ஆனால் அவரது அரசியல் பயணம் தெளிவாக இருக்க வேண்டும்.. ஸ்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.. குழப்பமோ, சொதப்பல்களோ இருக்கக் கூடாது.. கடந்த கால விஜயகாந்த்தின் அனுபவங்களிலிருந்து விஜய் நிறையப் பாடம் கற்றிருக்கக் கூடும். அதை அவர் தனது அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
விஜயகாந்த் வந்தபோது தமிழ்நாடு மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மட்டும் கூட்டணி அரசியலுக்குப் போகாமல், தெளிவான, உறுதியான அரசியலை முன்னெடுத்திருந்தால் நிச்சயம் புதிய மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். அதை அவர் செய்யத் தவறியதால்தான் தோல்வியடைந்தார். அந்தத் தவறை விஜய் செய்யாமல் தவிர்த்தால்.. தப்பிக்கலாம்.
எனவே இதுபோன்ற நீக்கு போக்குகளை சரியான முறையில் கையாண்டு தெளிவான அரசியல் பயணத்தை மேற்கொண்டால், நிச்சயம், சினிமாவில் சாதித்தது போல அரசியலிலும் சாதிக்க முடியும். சினிமாவில் வெற்றி எளிதானது.. ஆனால் அரசியலில் அப்படி இல்லை.. இங்கு முதலைகள் அதிகம், துரோகங்கள் அதிகம், காலை வாரி விடுவோர் கூடவே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.. எப்போது இவரை சாய்க்கலாம் என்று காத்திருக்கும் உள்ளங்களும் கூடவே உலவிக் கொண்டிருக்கும்.. எல்லாவற்றையும் தாண்டி, அரசியல் என்ற நெருப்பாற்றைத் தாண்டினால்.. விஜய்க்கு "வெற்றி" வசமாகும்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே புதியவர்களை வரவேற்பார்கள்.. ஆனால் அவர்கள் சரியாக செயல்பட்டால்தான் தொடர்ந்து ஆதரிப்பார்கள்.. அதையும் விஜய் மனதில் கொள்ள வேண்டும். எத்தனையோ பேர் அரசியலுக்கு வருகிறார்கள்.. விஜயகாந்த்தைப் பின்பற்றி கமல்ஹாசன் வந்தார்.. சீமான் வந்தார். இப்படி பலரும் வந்தார்கள்.. ஆனால் யாராலும் வெல்ல முடியவில்லை.. இன்னொரு எம்ஜிஆரை திரைத்துறை அரசியலுக்கு தர முடியவில்லை. அதை விஜய் சாதித்தால் அது நிச்சயம் வரலாறாக மாறும்.. ஆனால் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பார்க்கலாம்.. விஜய் எப்படி அரசியல் செய்யப் போகிறார் என்பதை.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}