சென்னை: சென்னை: சிறப்பான பீல்டிங் இருந்தும் கூட உரிய நேரத்தில் முக்கிய விக்கெட்களைத் தூக்கத் தவறியதாலும், பவுலிங்கில் சற்று கோட்டை விட்டதாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
முன்னதாக சென்னை அணியின் பேட்டிங்கின்போது புதுமுக வீரர் பிரேவிஸ் இன்று அதிரடியாக ஆடி ரன் குவித்தார். ஆயுஷ் மாத்ரேவும் தன் பங்குக்கு 30 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார். கடைசி வரிசையில் தீபக் ஹூடா கடைசி நேரத்தில் போராடிப் பார்த்தார். ஆனாலும் ஸ்கோர் 160 ஐத் தாண்டவில்லை. கேப்டன் தோனி இன்று ஏமாற்றமளித்து விட்டார்.
பிரமிக்க வைத்த பிரேவிஸ்
24 பந்துகளில் 42 ரன்களை பின்னி எடுத்த பிரேவிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை இன்றைய சூப்பர் ஸ்டார் புதுமுக வீரர் பிரேவிஸ்தான். மாத்ரே அவுட்டானதைத் தொடர்ந்து சென்னை அணி தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக புதுமுக வீரர் டெவால்ட் பிரேவிஸ் அதி அற்புதமாக ஆடினார். 24 பந்துகளில் 42 ரன்களை அவர் குவித்தார். இதில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடக்கம். அவரது பேட்டிங் வான வேடிக்கையால் சேப்பாக்கம் ஸ்டேடியே குதூகலமானது. ரவீந்திர ஜடேஜா 16 பந்துகளில் 2 1 ரன்களைக் குவித்தார்.
இருப்பினும் இவர்களுக்குப் பிறகு சென்னை அணி வழக்கம் போல சொதப்ப ஆரம்பித்தது. சிவம் துபே 8 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார். மிகப் பெரிய ஸ்கோரை எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக சென்னை அணியின் ஸ்கோர் ஏனோ தேக்க நிலையை எட்டியது. குறிப்பாக தோனி, ஹூடா இருவரும் இணைந்து கட்டையைப் போட்டு ஆடியது ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டது.
கேப்டன் தோனி 9 பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்த நிலையில் சர்வ சாதாரணமாக கேட்ச் ஆகி ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. முந்தைய போட்டிகள் போல அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் சுலபமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதிரிபுதிரியாக ஆடி வந்த ஆயுஷ் மாத்ரேவை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் அவுட்டாக்கி ஹைதராபாத் ரசிகர்களுக்கு நிம்மதி அளித்தார். சரமாரியாக ரன்களைக் குவித்து வந்த மாத்ரே, படு வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டதால் சென்னை ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இருந்தனர். ஆனால் 5.3வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடித்த மாத்ரே, இஷான் கிஷனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 19 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தார் மாத்ரே. 3வது விக்கெட்டை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறத் தொடங்கியது.
ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த சாம் கரன் 10 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் வர்மாவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
சென்னை அணியின் முதல் பந்தே பேரதிர்ச்சியாக அமைந்தது. முகம்மது ஷமி வீசிய பந்தை எதிர்கொண்ட ஓப்பனர் ஷேக் ரஷீத் அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தையே அதிர்ச்சியில் மூழ்கடித்தார். பெரிய அளவில் ரன் குவிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஷீத் கோல்டன் டக் அவுட் ஆகி கடுப்பாக்கி விட்டார்.
ஏப்ரல்25 ராசி ஒர்க் அவுட் ஆகலை
ஏப்ரல் 25 ராசியை நம்பி ஏமாந்த ரசிகர்கள்
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 6 தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அதற்கு மேலே அதாவது 9வது இடத்தில் ஹைதராபாத் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளும் இன்று சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று முக்கியப் போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டியில் ஒரு ராசி குறித்து பேசப்பட்டது. அதாவது ஏப்ரல் 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகள் அனைத்திலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 7 போட்டிகளில் இதே தேதியில் சென்னை அணி வென்றுள்ளது. இன்றும் அந்த ராசி தொடரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் மொத்தமாக ஏமாந்து போய் விட்டனர் ரசிகர்கள்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}