சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அதிரடியான பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ள உச்சநீதிமன்றம் அந்த நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிறுத்தி வைத்துள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இப்போதுதான் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதால் நாடு முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கு மட்டுமல்லாமல், ஆளும் மத்திய பாஜக அரசுக்கும் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதாகவும், துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் அதிக தலையீடு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மசோதாக்கள் சட்டத்திற்கு புறம்பானதா என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் வழக்கையும் ஒத்தி வைத்திருந்தது.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
- மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது. அரசியலமைப்பு சாசனம் 200 சட்ட பிரிவின் கீழ் ஆளுநர் செயல்பட வேண்டும். பத்து மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.
- இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மறுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். அதனால் பத்து மசோதாகளுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
- ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. மாநில அரசின் ஆலோசனைப்படிதான் அவர் செயல்பட வேண்டும்.
- குடியரசுத் தலைவருக்கு பத்து மசோதாக்களை அனுப்பி வைத்தது செல்லாது. இந்த சட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒரு மாதம் காலக்கெடு விதிக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் நடவடிக்கையும் செல்லாது
இன்றைய தீர்ப்பில் மிக மிக முக்கியமாக, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசாதோக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த 10 மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் அதுவும் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை இந்தத் தீர்ப்பு உள்ளடக்கியுள்ளது என்பதால் நாடு முழுவதும் அது பெரும் பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த இந்த வழக்கில், மத்திய அரசு சமர்ப்பித்த முக்கிய வாதங்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது என்பதும் முக்கியமானது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}