திருச்சூர்: திருச்சூர் ரயில்வே பிளாட்பாரத்தில் நிறைமாத பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் பணிபுரியும் தனது கணவரை சந்திப்பதற்காக நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் தனது இரண்டு வயது மகனுடன் திருச்சூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எதிர்பார விதமாக பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்த அந்தப் பெண் கதறி அழுதார். இதனை பார்த்த சக பயணிகள் உடனே ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே ரயில்வே பிளாட்பாரத்தில் அந்தப் பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார், அஜிதா குமாரி, ஜெயக்குமார், சஜிமோன், ஸ்ரீ ராஜ் கீது மற்றும் அர்த்தனா ஆகியோர் கொண்ட போலீஸ் குழு தாயும் சேயையும் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் தாயும் சேயும் நலமாக இருப்பதை மருவத்தூரிடம் கேட்டறிந்து உறுதி செய்தனர். இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி அர்த்தனா கூறஉகையில், 2வது பிளாட்பாரத்தில் நான் டூட்டியில் இருந்தேன். அப்போதுதான் இதுகுறித்து எனக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக ஆம்புலன்ஸை நாங்கள் வரவழைத்தோம். ஆனால் அதற்குள் பிரசவம் நடந்து விட்டது. குழந்தை பிறந்ததுமே நன்றாக அழுதது. இதனால் அது இயல்பு நிலையில் இருப்பது தெரிய வந்தது. அம்மாவும், குழந்தையும் நன்றாக உள்ளனர். அந்தப் பெண்ணுடன் வந்த அவரது மகனும் பத்திரமாக உள்ளார் என்று கூறினார்.
அம்மாவுக்கும், புதிதாய் பிறந்த அந்த குட்டிப் பாப்பாவுக்கும் நம்மோட வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
{{comments.comment}}