வதோதரா: 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு வதோதராவில் தொடங்குகிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மும்பை அணியும், 2024 ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.
பெங்களூரு ஆண்கள் அணி பல காலமாக சாம்பியன் பட்டத்தை வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் 2வது போட்டித் தொடரிலேயே பெங்களூரு மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை அடித்துச் சென்று அசத்தியது.

இந்த நிலையில் இன்று 3வது போட்டித் தொடர் தொடறங்குகிறது. இந்த போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உத்திரப்பிரதேசம் வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என ஐந்து அணிகள் மோதுகின்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியினருடன் தலா இரண்டு முறை போட்டியிடவுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் முதல் போட்டி வதோதராவில் தொடங்குகிறது. இதனையடுத்து பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இடையே முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வதோதராவில் தொடங்க இருக்கிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தடவையும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!
தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!
வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்
கடற்பாசி ஜெல்லி.. சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீம் ஸ்வீட்டுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 03, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிகள்
அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்!
சமையல் அறையில்.. நான்!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
{{comments.comment}}