மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..  ராஜ்யசபாவில் இன்று தாக்கலாகிறது

Sep 21, 2023,12:41 PM IST
புதுடெல்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது.

பல வருடங்களாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று ஒரு வழியாக மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு "நாரி சக்தி வந்தன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த மசோதவை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதால்  2024ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன்எனில், இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கி பிறகு, நாடு முழுவதும் மக்கள் தொகை  கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பின்னர், கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வெறும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மகளிர் இடஓதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது.  இங்கு நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும்.

காங்கிரஸ் கட்சி பெண் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் இதுபற்றி கூறுகையில், "இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு தேவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா சட்டமாகவில்லை.

பாஜக உண்மையாகவே இந்த மசோதாவை விரும்பி இருந்தால், 2021-ம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்கள். அதோடு, இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்திருக்கும். ஆனால், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்பதால், 2029ம் ஆண்டு தேர்தலின்போதுதான் இது அமலாக வாய்ப்புள்ளது. பாஜகவின் திட்டம் தெளிவாகிவிட்டது" என விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்