உலக கோடீஸ்வர்கள் எந்த காலேஜில், என்ன டிகிரி படித்தார்கள் தெரியுமா?

Jul 15, 2023,11:14 AM IST
நியூயார்க் : உலகையே திரும்பி பார்க்க வைத்த உலகின் மிக பிரபலமான கோடீஸ்வரர்கள் எந்த காலேஜில் என்ன டிகிரி படித்தார்கள் என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பற்றி நமக்கு பெரும்பாலும் நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். குறிப்பாக அவர்கள் செய்யும் தொழில், எவ்வளவு சொத்து மதிப்பு.. இப்படி. ஆனால் அவர்கள் எங்கே படித்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உலக கோடீஸ்வரர்கள் என்ன படித்தார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் பலரையும் கவர்ந்துள்ளது. யார் யார் என்ன படித்தார்கள் என்று நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க.



எலன் மஸ்க்  : டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைவரும், ட்விட்டர் உரிமையாளருமான எலன் மஸ்க் பெனின்சுலா பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி எகனாமிக்ஸ் படித்தவர்.

மார்க் ஜூகர்பெர்க் : மெட்டா நிறுவனத்தின் சிஇஓ, இணை நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், லண்டன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படித்தவர். அந்த படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தொழில் துறை மீதான ஆர்வத்தால் கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் ப்ரோகிராமிங் கற்றுக் கொண்டவர்.

பில் கேட்ஸ் : மைக்ரோசாப்ட் துணை நிறுவனம் பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க துவங்கி, பிறகு கணித துறைக்கு மாறி அதில் கவனம் செலுத்தினார். சிறிது நாட்களில் அந்த படிப்பையும் பாதியில் நிறுத்தியவர்.

ஜெஃப் பிஜோஸ் : அமேசான் நிறுவனத்தின் மூளையாக இருந்து செயல்படும் ஜெஃப் பிஜோஸ் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் கம்யூட்டர் சயின்சும் படித்தவர்.

லாரி எலிசன் : ஆரகிள் நிறுவன தலைவர் லாரி எலிசன் முதலில் சிகாகோ பல்கலைகழகத்திலும், பிறகு இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்திலும் பட்டப்பிடிப்பை படிக்க துவங்கி, இரண்டையும் பாதியில் விட்டவர்.

ஸ்டீவ் பால்மர் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் பால்மர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அப்ளைடு சேக்ஸ் அன்ட் எகனாமிக்ஸ் பிரிவில் பிஏ பட்டம் படித்தவர்.

சரி இவங்களை விடுங்க.. நம்ம ஊர் கோடீஸ்வரர்கள் எங்கே படிச்சாங்கன்னு பார்க்கலாமா...



முகேஷ் அம்பானி: மும்பையில் உள்ள கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் கெமிக்கல் என்ஜீனியரிங் படித்தவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. அதேபோல அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் படித்துள்ளார் முகேஷ்.

கெளதம் அதானி: இவர் ஒரு படிக்காத மேதை.. பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர் அதானி. குஜராத் பல்கலைக்கழகத்தில் பிகாம் சேர்ந்தார்.ஆனால் 2வது வருடத்தோடு அதிலிருந்து விலகி தனது தந்தை பார்த்து வந்த தொழிலில் இணைந்து கொண்டார்.. படிக்காவிட்டாலும் கூட இன்று உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் இவரும் முக்கிய இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்