லண்டன்: அறிமுக போட்டியில் சதம் போடுவதில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, லண்டன் லீட்ஸில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அட்டகாசமான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால், இந்திய அணியில் இரண்டு பெரிய வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. எனவே, அவர்கள் இல்லாத நிலையில், இந்தியா பெரிதும் நம்பியிருக்கும் பேட்டர்களில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்தப் போட்டியில், இந்தியாவுக்கு பெரும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஆடியுள்ளார். மீண்டும் ஒருமுறை சதம் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். அத்தோடு புதிய சாதனை ஒன்றையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கு எதிராகவும் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். 93 ஆண்டுகளில் இல்லாத புதிய வரலாறு ஆகும் இது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 129 பந்துகளில் 101 ரன்கள் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கே.எல். ராகுலுடன் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் நான்காவது விக்கெட்டுக்கு 129 ரன்களும் சேர்த்து இரண்டு முக்கியமான பார்ட்னர்ஷிப்பையும் போட்டு அசத்தியுள்ளார் ஜெய்ஸ்வால்.
சிறப்பான சதத்தை அடித்த ஜெய்ஸ்வால், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}