சென்னை: அழகான ராட்சசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், பேயாய் நடித்தால் எப்படி இருக்கும்.. செமையா இருக்குல்ல.. கேட்கவே.. நாளைக்கு திரைக்கு வருகிறது, யாஷிகா பேயாய் நடித்துள்ள சைத்ரா படம்.
இது ஒரு திரில்லர் கலந்த ஹாரர் படமாகும். யாஷிகா ஆனந்த் இதில் பேயாய் நடித்துள்ளாராம். பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதேசமயம் பல படங்களிலும் சிறு சிறு ரோல்களில் நடித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு, கடமையை செய் போன்ற ஒருசில படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள புதிய படம்தான் சைத்ரா. பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக இருந்த ஜெனித்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே. மனோகரன் தயாரித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் ( சைத்ரா ) அவிதேஜ் ( கதிர் ) சக்தி மகேந்திரா ( திவ்யா ), பூஜா ( மதுமிதா ) கண்ணன் ( இன்ஸ்பெக்டர் ), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை பிரபாகரன் மெய்யப்பன். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சதீஷ் குமார் செய்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

அழகிய தீயாய் வலம் வரும் யாஷிகாவை அழகிய பேயாய் பார்க்க தயாராகுங்கள்!
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மா(மே)ரியம்மாள் பவனம்.. ஒரு நிமிடக் கதை (19)
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
என் தமிழ்.. ஏன் தமிழ்?
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
{{comments.comment}}