- க.யாஸ்மின் சிராஜூதீன்
தைப்பொங்கல் மறுநாளே
மாட்டுப்பொங்கல் திருநாளே
'பட்டிப்பொங்கல்' அல்லது 'கன்றுப்பொங்கல்" என்போமே..!!
உழவனின் நண்பன் கால்நடைகளே
கால்நடைகளுக்கு நன்றிசெலுத்தும் நாளே...!!
மாடுகளுக்குப் புதுப்பொலிவு
வந்திடுமே
கொம்புகள் எல்லாம் வண்ணமாகுமே
கூரான கொம்பில் சலங்கை ஆடுமே

கழுத்தில் சலங்கைப்பட்டை ,பூமாலை ஆபரணமாகுமே..!!
சந்தனம்,மஞ்சள்,குங்குமம் நெற்றியில் சூடுமே..!!
மூக்கணாங்கயிறு,தாம்புக்கயிறு
வண்ண வண்ணமாய் ஒளிவீசுமே!!
உழவுக்கருவிகள் சுத்தமாகுமே..
சந்தனம் குங்குமம்பூசி மணம் கமழுமே....!!!
தோட்டத்தில் விளைந்தவை எல்லாம் பூஜைக்கு வந்திடுமே !!
தொழுவத்தில் பொங்கல் பொங்கிடுமே..!!!
தீபாராதனை எல்லாம் காட்டிடுவோம்!!
பசு,காளை,எருமை கால்நடைகளுக்கு
எல்லாம் பொங்கல்,பழம் தந்திடுவோம்...!!! மகிழ்ந்திடுவோம்!!!
கால்நடைகளை வணங்கிடுவோம்
தமிழர்களின் வீரவிளையாட்டு
ஜல்லிக்கட்டுகளைகட்டிடுமே..!
வாடிவாசலில் காளை சீறிப்பாய்ந்திடுமே...!!!
பசுவே நீ உலகிற்கு தாயே ..!!!
தாய் முகம் காணாபிள்ளைகளுக்கு
நீ கொடுக்கும் பால் அமிர்தமே ..!!
பசி போக்கி உயிர் காப்பவளே..!!!
தோழனாய் அனைவருக்கும் உதவி செய்திடுவோம்...!!
தமிழன் என பார்போற்ற வாழ்திடுவோம்..!!!
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தை மகள் பிறந்தாள்
தனுஷின் D54 டைட்டில் கர...மிரட்டலாக வெளியான 'கர' டீசர்
விஜய்யால் தான் கரூர் சம்பவம் நடந்தது...டி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
தமிழின் பெருமை திருக்குறள்!
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
மாலன் போற்றும் மாட்டுப் பொங்கல் .. மனிதனும் மாடும் கலந்து களிக்கும்.. கூட்டுப்பொங்கல்!
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்.. திருவள்ளுவர்!
தூக்கம் - தியான நிலை (SLEEP is the Best Meditation)
கொம்புகள் எல்லாம் வண்ணமாகுமே.. கூரான கொம்பில் சலங்கை ஆடுமே!
{{comments.comment}}