சென்னை: யாவரும் வல்லவரே திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். இப்படம் முழுக்க மிகப்பெரிய நடிகர் ஒருவருடைய போட்டோ ட்ராவல் ஆகும் அது யார் என்பது சஸ்பென்ஸ் என இயக்குனர் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.
சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு கூட்டணியில் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள யாவரும் வல்லவரே திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி திரை அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அன்பு என்பது நிஜ வாழ்வில் மட்டுமல்ல. சினிமாவிலும் என்றும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யாவரும் வல்லவரே திரைப்படம் ஹைபர் லிங்க் கதையாக உருவாகி உள்ளதாம்.இதில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ் சைத்தான், அருந்ததி, மெட்ராஸ் ரித்திகா, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு மிகப்பெரிய நடிகரோட போட்டோ இந்த படம் முழுக்க டிராவல் ஆகுமாம். அது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்குமாம்.

இப்படம் வரும் மார்ச் 15 அன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தைப் பற்றி இயக்குனர் சக்கரவர்த்தி கூறுகையில்,
இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க் கதைக்களம் கொண்டது. இளைஞர்கள், குடும்பம் என்று இந்தக் கதைக்கான பார்வையாளர்களைப் பிரிக்க முடியாது. ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக இது உருவாகி இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம்.

குடும்பங்களுக்கு நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது என கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}