சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் போட்டியா...நெருக்கும் பாஜக.. எடியூரப்பா பதில் இதுதான்!

Apr 01, 2023,11:43 AM IST

பெங்களூரு: வருணா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திராவைப் போட்டியிட வைக்க வேண்டும் என்று பாஜகவில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வருணா தொகுதியில் தனது மகன் போட்டியிட மாட்டார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக அரசியலில் மேலும் ஒரு வாரிசு டாக் ஆப் தி டவுனாக மாறியுள்ளது. அவர்தான் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூருக்கு வந்தபோது எடியூரப்பாவை விட அவரது மகன் விஜயேந்திராவைத்தான் அமித் ஷா முன்னிலைப்படுத்தினார். எனவே எடியூரப்பாவை விட அவரது வாரிசுக்கு  பாஜக முக்கியத்துவம் கொடுப்பதும் தெரியவந்தது.



இந்த நிலையில் சட்டசபை பொதுத் தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுகிறார். வருங்கால முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியினரால் அழைக்கப்படுபவர் சித்தராமையா. அவரை எதிர்த்து  பாஜக யாரை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அங்கு போ���்டியிடலாம்  என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அதை தற்போது எடியூரப்பா மறுத்துள்ளார். இதுகுறித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருணா தொகுதியில் விஜயேந்திராவை நிறுத்த வேண்டும் என்று கடுமையான நெருக்கடி உள்ளது. பலரும் அழுத்தம் தருகின்றனர். ஆனால் அவரை நான் ஷிகாரிபுரா தொகுதியில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளேன். வருணாவில் அவர் போட்டியிடுவார் என்ற கேள்விக்கே இடமில்லை என்றார் எடியூரப்பா.

ஷிகாரிபுரா தொகுதியில்தான் தற்போது எடியூரப்பா உறுப்பினராக இருக்கிறார். இந்தத் தொகுதியில் தனக்குப் பின் தனது மகன்தான் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது எடியூரப்பாவின் ஆசையும் கூட. எனவே அவர் தனது மகன் தொகுதி மாறுவதை விரும்பவில்லை. 

சமீபத்தில்தான் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. சித்தரமையாவுக்கு எதிராக எடியூப்பா மகனை நிறுத்தி அவரை தோல்வியுற வைத்து எடியூரப்பாவின் குடும்பத்தையே அரசியலிலிருந்து ஒழிக்க பாஜக தலைவர்கள் சிலர் சதி செய்கிறார்கள். இந்த சதி வலையை உணர்ந்து  எடியூரப்பா சுதாரிக்க வேண்டும் என்று  காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் எடியூரப்பாவின் இந்த கருத்து வந்துள்ளது.

கர்நாடகாவின் வாரிசு அரசியல்

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் ஏகப்பட்ட வாரிசுகள் போட்டியிடுகின்றனர். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடுகிறார். சித்தராமையா மகன் எதீந்திரா போட்டியிடுகிறார். சித்தராமையாவும் போட்டியிடுகிறார். தேவெ கெளடா மகன் குமாரசாமி, மூத்த மகன் ரேவண்ணா போட்டியிடுகிறார்கள். கட்சி பாரபட்சமே இல்லாமல் அங்கு எல்லாக் கட்சிகளிலும் வாரிசுகள்தான் கோலோச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்