லட்சுமி மேனனுடன் யோகி பாபு.. மலைக்க வைக்கப் போகும் மலை.. அக்டோபரில் காண ரெடியாகுங்க!

Aug 22, 2024,03:38 PM IST

சென்னை:   காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் மலை படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு தேதி மற்றும் பாடல்கள் வெளியாக உள்ளது .


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய யோகி பாபு தற்போது ஹீரோவாக அதாவது கதை நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கியிருக்கும் மலை படத்தில் யோகிபாபு வேட்டைக்காரனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.




நாயகி லட்சுமிமேனன் சிட்டியில் இருந்து கிராமத்திற்கு வரும் மருத்துவராக நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட் வில்லனாகவும், சிங்கம்புலி, குழந்தை நட்சத்திரம், சதுர்த்திகா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ஆர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சௌந்தர்ய கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் என்ற படத்தை தயாரித்துள்ளனர். மலை படம் இவர்களுக்கு இரண்டாவது படமாகும். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிபரப்பு செய்ய, இமான் இசையமைத்திருக்கிறார்.




மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை வளங்களை மெல்ல மெல்ல சுரண்ட ஆரம்பிக்கிறான். பேராசையால் இயற்கை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து  நிறுத்தி இருக்கிறார்கள் என்ற கோணத்தில் தமிழக மலை கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுயநல கோரப் பசிக்கு இயற்கையின் பதில் என்ன..? என்ற அடிப்படையில் படம் உருவாகியுள்ளதாம்.


இந்த நிலையில் யோகி பாபு லட்சுமிமேனன் மற்றும் காளி வெங்கட் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலை  திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகிறது. மேலும் இப்படத்தின் பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.




லட்சுமி மேனன் ஒரு பண்பட்ட நடிகை.. முக்கிய நாயகர்களுடன் இதற்கு முன்பு நடித்துள்ள அவர் தற்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமான நடிகரான யோகிபாபுவுடன் கை கோர்த்துள்ளார். இதிலும் அவர் பின்னிப் பெடலெடுத்திருப்பார் என்று நம்பலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்



சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்