சென்னை: அரிசி விலை அதிகரித்துக்கொண்டே வருவதால், ஏழை மக்களின் நலனுக்காக மத்திய அரசு ரூ.29க்கு "பாரத் அரிசி" வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்களின் சுமையை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறை விலைக்கு கிலோ ரூ.29க்கு அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாராண மக்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் அந்த அரிசி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பேக்குகளில் இந்த அரிசி வழங்கப்படும். ஏற்கனவே பாரத் ஆட்டா கிலோ ரூ.27.50க்கும் பாரத் தால் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், தற்போது பாரத் அரிசியும் விற்பனைக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஓராண்டாக கட்டுப்பாடுகளை விதித்தது. அரிசி விலை சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரத் அரிசி என்ற பெயரில் மானிய விலையில் சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ. 29க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும். இணைய வழியில் இணைய வணிக வலைத்தளங்கள் மூலம் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும். அடுத்த வாரம் முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். ஐந்து கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}