பீஜிங்: சீனாவைச் சேர்ந்த லீ முசி என்ற 13 வயது பள்ளி மாணவி சீனாவில் பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்து வரலாறு படைத்து அசத்தியுள்ளார்.
பரதநாட்டியம் தமிழகத்தை சேர்ந்த ஒரு பாரம்பரிய நடனமாகும். இந்த நடனம் தமிழ்நாட்டில் தோன்றி, தென்னிந்தியா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பரதநாட்டியம் புகழ் பெற்றும் விளங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தோன்றியது பரதம்.

இந்தகைய சிறப்பு வாய்ந்த பரதநாட்டியத்தை சீனாவில் உள்ள குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் லீ முசி. 13 வயதுடைய சீனாவை பூர்விகமாக கொண்ட லீ முசி பரதநாட்டிய கலையை கற்று முறையாக அரங்கேற்றம் செய்து புதிய வரலாற்றை நடைத்துள்ளார்.
சமீபத்தில் சீனாவில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தூதர் பிரதீப் ராவத்தின் மனைவி ஸ்ருதி ராவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடன விழாவை ஏராளமான சீன மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.
13 வயதுடைய லீ முசி சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையை கற்று பயிற்சி பெற்றுள்ளார். லீ முசியின் அரங்கேற்றம் குறித்து அவரது ஆசிரியர் லீலா சாம்சன் கூறுகையில், "தென்னிந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஒரு சீன மாணவியால் சீன ஆசிரியர் கொண்டு சீனாவில் அரங்கேற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. எனவே, இது பரதநாட்டியத்தில் ஒரு மைல்கல் மட்டுமல்லாது ஒரு வரலாற்று தருணமும் ஆகும். லீ முசியின் பரதநாட்டிய அரங்கேற்றமானது எங்களுக்கு ஒரு திருவிழாவைப் போன்றது" என்றார்.
இது குறித்து லீ முசி கூறுகையில், "பரதநாட்டியம் ஒரு அழகான நடனக் கலை மட்டுமல்லாமல், இந்திய கலாசாரத்தின் உருவகமாகவும் இருக்கிறது. பரதநாட்டிய நடனத்தின் அழகான அசைவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய கலாசாரத்தில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். பரதநாட்டியமானது ஏற்கனவே எனது தினசரி வாழ்வின் செயல்பாடுகளில் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்றார். இந்த மாத இறுதியில் சென்னையில் லீ முசி நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு
NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்
தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு
Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!
பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்
{{comments.comment}}