சென்னை: 1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த 2 தேர்தல்களிலும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்களை எதிர்த்து நின்று தான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ல் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியதும் தனது இலக்கு 2026 என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்படி, தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிவிகே கட்சியின் பதிய உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று அக்கட்சித்தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த செயலிக்கு மை டிவிகே என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியை பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்தார் விஜய். அதன்பின்னர் விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து விஜய் பேசுகையில், 1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த 2 தேர்தல்களிலும் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்களை எதிர்த்து நின்று தான் புதிதாக வந்தவர்கள் வென்றார்கள்.
இந்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைத் தான் நானும் சொல்கிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு இதை சரியாக செய்தாலே போதும். ஊருக்கு ஊர் நேருக்கு நேர் மக்களை சந்தித்தாலே நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதனால் தான் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தது மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்கள் உடன் மக்களாக தான் இருக்க போகிறோம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
                                                                            தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
                                                                            கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
                                                                            அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
                                                                            சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
                                                                            கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
                                                                            'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
                                                                            ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}